This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

November 30, 2009

அரசின் ரகசியங்களை யாரும் வெளியிடலாமா?ஜெயலலிதா அவர்கள் கேள்வி?

அம்மா அவர்கள் 29.11.2009 அன்று வெளியிட்ட அறிக்கை:
லிபரான் கமிஷன் அறிக்கை கசிந்ததற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினால் 'சிதம்பரம் மீது சீற்றம் ஏன்?என்று முதல்வர் கருணாநிதி என்னை கேட்டுள்ளார்.1992 ல் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு குழு கூட்டத்தில் பாபர் மசூதி அப்படியே இருக்க வேண்டும் இந்த நாட்டு மக்கள் நிம்மதியாக அமைதியுடன் வாழ வழி வகுக்க வேண்டும் என்று நான் தெள்ள தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.இதை வேண்டுமென்றெ மறைத்து அவர் அறிக்கை விட்டுள்ளார்.லிபரான் அறிக்கை கசிந்ததற்கு காரணம்,சிதம்பரம் என்பதால்தான் அவர் வெளியேற வேண்டும் அல்லது வெளியெற்றப்பட வேண்டும் என்று நான் தெரிவித்தேன்.ஆனால் ஒரு சம்பவத்திற்காக விசாரணை ஆணையம் நியமிக்கப்படுவதும்,அது அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்வதும் பொதுவான நடைமுறைதான் என்றும் அதை அரசு வெளியிடும் முன் எதிர்க்கட்சியினரால் வெளியிடப்படுவதும் உண்டு என்றும் அந்த வகையில் பால் விசாரனை ஆணையத்தின் அறிக்கையை முன் கூட்டியே தான் வெளியிட்டு விட்டதாகவும் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.அப்படி யென்றால் தனக்கு அநத அறிக்கை எப்படி கிடைத்தது என்ற ரகசியத்தை அரசிடம் தெரிவித்து அதற்க்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்போது அவர் வலியுறுத்தியிருக்க வேண்டும் இதற்கு மாறாக நீதிபதி பால் அறிக்கை எவ்வாறு வெளியானது அதற்கு யாரை பழி வாங்குவது என்பதில் நேரத்தை செலவிட வேண்டாம் என்று பேரவையில் பேசியதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார் அப்படி பார்த்தால் அரசு ரகசியங்களை யார் வேண்டுமானாலும் முன் கூட்டியே வெளியிடலாமா?

November 28, 2009

பக்ரீத் வாழ்த்துக்கள் அம்மா ஜெயலலிதா


இறைவனுக்கு இணையாக எதுவும் இல்லை என்ற பற்றை உணர்த்தும் நாள்.பகிர்ந்துண்ணும் பழக்கத்தை போதிக்கும் நாள்.தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் நாள் பக்ரீத் நாள்.தன்னலத்துக்காக பிறரை பலி கொடுக்கும் இந்த உலகில் தான் பெற்ற ஒரே மகனையும் தியாகம் செய்யத் துணிந்த இறைத்தூதர் இப்ராகிமின் அர்ப்பணிப்பை,தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்ந்து,அன்பு சகோதரத்துவம்,ஒற்றுமை ஆகியவற்றை வளர்த்து நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

.

November 27, 2009

பாபர் மசூதி இடிப்பு சிதம்பரம் ?????


Swine Flu பொது செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன், 17 ஆண்டுக்கு பிறகு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இன்றைய சூழ்நிலையில், கமிஷனின் முடிவுகள் படிக்க மட்டுமே பயன்படும். மதத்தில் அரசியல் புகுத்தப்பட்டதால் பிரச்னை ஏற்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பதும் குறிப்பிடவில்லை. பல கோடி ரூபாய் செலவழித்து, 17 ஆண்டுக்கு பிறகு பெறப்பட்ட அறிக்கை, வெறும் சூட்டையும், தூசியையும்தான் கிளப்பி விட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு, அறிக்கையின் சில பகுதிகள் எப்படி பத்திரிகைகளுக்கு கசிந்தன. இந்த பிரச்னையை, எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் அவசர, அவசரமாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கை கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை ராஜினாமா செய்ய கோருவது நியாயம். ஆனால், ‘அறிக்கை கசிந்தது துரதிருஷ்டவசமானது. உள்துறை அமைச்சகத்துக்கு வெளியில்தான் அது ஏற்பட்டிருக்கிறது’ என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்செக்ஸ் குறியீடு அபரிதமாக உயர்ந்தபோது தன் பொருளாதார கொள்கைதான் காரணம் என்று நிதி அமைச்சராக இருந்தபோது சொன்னார். வீழ்ச்சி ஏற்பட்டபோது சந்தை மீது பழி போட்டார். இதே முறையைதான், இப்போதும் சிதம்பரம் கடைபிடித்திருக்கிறார். கரும்பு விலை அவசர சட்டம், மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை சட்டம், முல்லை பெரியாறு பிரச்னை என முக்கியமான மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் லிபரான் அறிக்கை பின்னுக்கு தள்ளிவிட்டது. மத்திய அரசு மட்டும்தான் இந்த அறிக்கை கசிவின் மூலம் பயன் அடைந்துள்ளது. இது சூழ்ச்சியுடன் திட்டமிட்டு வெளியிடப்பட்ட கசிவு.

அறிக்கையின் ஒரே ஒரு நகல் மத்திய உள்துறை அமைச்சரிடம் மட்டும்தான் இருந்தது. எனவே, அறிக்கை கசிவுக்கு சிதம்பரம்தான் முழு பொறுப்பு என்பது வெளிப்படை. அவர் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
நன்றி தினகரன்

இடைத்தேர்தல் அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்.

அம்மா அறிக்கை: திருச்செந்தூர்,வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் ,அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள குழு அமைக்கப் பட்டுள்ளது.திருச்செந்தூர் தொகுதி தேர்தல் பணிக் குழு தலைவராக திரு.செங்கோட்டையன் M.L.A , வந்தவாசிக்கு திரு.தம்பிதுரை M.P ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்,கட்சி தொண்டர்கள் தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.


.

அதிமுகவுக்கு மதிமுக ஆதரவு:திரு. வைகோ அவர்கள்


மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று [26.11.2009]பிற்பகல் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா அவர்களை போயஸ் கார்டனில் சந்தித்தார் அதன்பின் நிருபர்களிடம் திருச்செந்தூர்,வந்தவாசி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக மதிமுக தீவிரமாக பணியாற்றும்.டிசம்பர் 3ம் தேதி திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறேன்.வந்தவாசி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து 5ம் தேதி பிரச்சாரம் செய்கிறேன்.8ம் தேதி முதல் 10ம் தேதி வரை திருச்செந்தூரிலும்,14ம் தேதி முதல் 16ம் தேதி வரை வந்தவாசியிலும் பிரச்சாரம் செய்கிறேன்.இவ்வாறு கூறினார்.இந்திய குடியரசு கட்சி தலைவர் திரு.செ.கு.தழிழரசன்,அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் திரு.சேதுராமன்,பார்வர்ட் பிளாக் கதிரவன் ஆகியோர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

.

November 26, 2009

தா.பாண்டியன் அ.தி.மு.க க்கு ஆதரவு

வந்தவாசி,திருச்செந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும் என்று தா.பாண்டியன் கூறினார்.இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அவர்கள்,மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு,நிர்வாகிகள் ஏ.எம்.கோபு,மகேந்திரன் ஆகியோர் நேற்று[26.11.2009]மாலை 3 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களை போயஸ் கார்டனில் சந்தித்தனர்.


.

November 24, 2009

மத்திய அரசின் மீனவர் சட்டத்தை,... அதிமுக எதிர்ப்பு...

அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அவர்கள் 23.11.2009 அன்று வெளியிட்ட அறிக்கை:தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கடல்மீன் தொழில் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்ட மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.படகுகளுக்கு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்,மீன் பிடிக்க உரிமம் பெற வேண்டும்,12கடல் மைல் தாண்டி மீன் பிடித்தால் 9 லட்சம் ரூபாய் அபராதம் 3 மாத சிறை என்று மீனவர்களை துன்புறுத்தக் கூடிய எல்லா அம்சங்களும் மசோதாவில் இடம் பெற்றுள்லன்.அதே சமயம்,வெளிநாட்டு மீன்பிடி படகுகள்,எந்த தடையுமின்றி இந்திய எல்லைக்குள் வர இந்த சட்டம் வழி வகுக்கிறது என்றும்,வெளிநாட்டினர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மீன் தேவையை கருத்தில் கொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்க இச் சட்டம் கொணடு வரப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.உடனடியாக இந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற கருநாநிதி வலியுறுத்த வேண்டும்.கரும்புக்கான ஆதார விலை குறித்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்த போது அதை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்தது அதிமுக தான் நாடாளு மன்றத்திலும் அதிமுக உறுப்பினர்கள் எதிர்த்தனர்.அதனால் மத்திய அரசு அதில் சில திருத்தங்களை கொண்டுவரவுள்ளது.அதேபோல் கடல் மீன் தொழில் மசோதாவையும் அதிமுக கடுமையாக எதிர்க்கும்.அதை அறிமுக நிலையிலேயே திரும்ப பெற அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடிப்பார்கள் இவ்வாறு ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.


.

November 23, 2009

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்


திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வருகிற டிசம்பர் 19ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் அணையம் அறிவித்து.

இதையடுத்து அ.தி.மு.க.இந்த இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். இந்நிலையில் இன்று காலை அ.தி.மு.க.சார்பில் திருச்செந்தூர்,வந்தவாசிதொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிவிப்பில் திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் அம்மன் நாராயணனும், வந்தவாசி தொகுதியில் முனுசாமியும் போட்டியிடுவார்கள் என்று அறிவித்துள்ளார்


.

இடைத்தேர்தல் அதிமுக.வினரிடம் அம்மா ஜெயலலிதா நேர்காணல்.

திருச்செந்தூர்,வந்தவாசி சட்டபேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் அம்மா ஜெயலலிதா அவர்கள் நேற்று[22.11.09]நேர்காணல் நடத்தினார்.திருச்செந்தூர்,வந்தவாசி சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 19 ம் தேதி நடக்கிறது இந்த முறை இடைத்தேர்தலில் அதிமுக கண்டிப்பாக போட்டியிடும் என்று அம்மா ஜெயலலிதா கடந்த 20ம் தேதி அறிவித்தார்.இதையடுத்து 2 தொகுதியில் இருந்தும் தலா 3 பேரை தேர்ந்தெடுத்து உடனடியாக சென்னை வரும்மாறு நேற்று முன் தினம் அழைப்பு விடுக்கப்பட்டது.திருச்செந்தூர் தொகுதியை சேர்ந்த பள்ளதூர் முருகேசன்[முன்னாள் ஒன்றிய செயலாளர்]அம்மன் நாராயணன்[உடண்குடி ஒன்றிய செயலாளர்]தாமோதரன்[2004 ல் திருச்செந்தூர் நாடாளு மன்ற தேர்தலிலும் ,1996 ல் திருச்செந்தூர் சட்டப்பேரவை தேர்தலிலும் தோற்றவர்]வந்தவாசி தொகுதியில் முனுசாமி[நகர M.G.R மன்ற பொருளாளர்]குணசீலன்[அனங்காவூர் ஒன்றிய செயலாளர்] சக்கரபாணி[மாவட்ட இளைஞர் அணி செயலாளர்] ஆகியோர் வந்தனர்.இவர்களை தனி தனியாக அழைத்து ஜெயலலிதா அவர்கள் நேர்காணல் நடத்தினார் வந்தவாசி தொகுதி தனித் தொகுதி என்பதால் அந்த தொகுதியை சேர்ந்த 3 பேரிடம்,ஜாதி சான்றிதழ் கொண்டு வருமாறும் உத்தரவிட்டார்.

November 21, 2009

கருநா நிதியின் துரோகத்தின் மொழி

க( கொ)லைஞரைப்பற்றி நீங்கள் தெரிந்துகொண்டது இவ்வளவுதானா?
அடடா !
அவர் சகோதரயுத்தம் என்று மீண்டும் மீண்டும் பிதற்றுகிறார் என்றால் , அதன் நேரடியான பொருளை நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது !
அவர் ஒரு சொல்லைச்சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்குமல்லவா?
அந்தவகையில்,இவர் கருதுவது :
தமக்குச்சார்பான சகோதரயுத்தம் நடைபெறவில்லையே என்பதுதான் அவரது ஆதங்கம் !
இதை என்றுதான் உண்மையாகப்புரிந்துகொள்கிறோமோ, அன்றுதான் தமிழனுக்கே விடிவுவரும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. நன்றி.... S.தளபதி சிவம் நாதன் அவர்கள்.


.

November 20, 2009

புதுச்சேரியில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்


அரியூர் சர்க்கரை ஆலை பிரச்சனை புதுச்சேரியில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் திரு அம்மா ஜெயலலிதா அவர்கள் அறிக்கை.புதுச்சேரியில் நஷ்டத்தில் இயங்கிய அரியூர் தனியார் சர்க்கரை ஆலையை இன்னோரு தனியார் நிறுவனம் வாங்கிய போது,ஆலையின் வங்கி கடன் போக,மீத முள்ள தொகை தொழிளாளர்களுக்கும் கரும்பு விவசாயிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஒராண்டுக்கு மேலாகியும் தொழிளாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை புதிய நிவாகம் ஆலையின் 375 தொழிளாளர்களில் 200 க்கும் மேற்ப்பட்டவர்களை நீக்கியதோடு ஆலையை இயக்காமல் வைத்திருக்கின்றனர்.இதனால் இந்த ஆலைக்கு வழங்க வேண்டிய கரும்பை அண்டை மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு தரவேண்டுடிய கட்டாயத்துக்கு கரும்பு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மேலும்,லிங்காரெட்டி பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உரிய கரும்பை தனியார் நிறுவனத்துக்கு அனுப்ப புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு அனுமதித்துள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே,புதுச்சேரி அரசு அரியூர் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும்,கரும்புக்கு ரூ.2000 வழங்க வலியுறுத்தியும் 20 ம் தேதி காலை 10 மணிக்கு அரியூர் சர்க்கரை ஆலை முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திரளான் விவசாயிகள்,பொது மக்கள் திரன்டனர் இதற்க்கு விவசாய பிரிவு செயளாலர் துரை கோவிந்தராஜன் தலைமை வகித்தார்கள்.


.

November 18, 2009

அதிமுக உள்கட்சி தேர்தல் அம்மா ஜெயலலிதா இன்று அவசர ஆலோசனை.


அதிமுக உள்கட்சி தேர்தல் அம்மா ஜெயலலிதா இன்று அவசர ஆலோசனை.அதிமுக சட்ட விதிகளின் படி உள் கட்சி தேர்தல்,ஜந்து ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும்.ஏற்கனவே 2003 ம் ஆண்டு அதிமுக உள்கட்சி தேர்தல் நடந்தது.இதைத் தொடர்ந்து உள்கட்சி தேர்தல் அறிவிப்பை ஜெயலலிதா அவர்கள் கடந்த 12ம் தேதி வெளியிட்டார்.முதல்கட்டமாக,நவம்பர் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரையும்,2ம் கட்டமாக 27 முதல் 30ம் தேதி வரையும் கிளை நிர்வாகிகள்,வார்டு,வட்டச்செயலாளர்கள் பொருப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது.3 வது கட்டமாக டிசம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஒன்றிய,நகர,பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகள் தேர்தலும்,4வது கட்டமாக டிசம்பர் 7 முதல் 11ம் தேதி வரை மாவட்ட செயலாளர்கள்,பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலும் நடக்கிறது.தேர்தலை நடத்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களாக கட்சி மூத்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களிடம் தேர்தல் பணி குறித்து இன்று காலை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா அவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

November 16, 2009

மு‌ல்லை‌ப் பெ‌‌ரியாறு ‌பிர‌ச்சனை‌யி‌ல் கருணா‌நி‌தி ‌நீ‌லி‌க்க‌ண்ண‌ீ‌ர் வடி‌க்‌கிறா‌ர்: ஜெயல‌லிதா கு‌ற்ற‌ச்சா‌ற்று செ‌ன்னை, திங்கள், 16 நவம்பர் 2009


முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி நீலிக்கண்ணீர் வடித்து தனது தவறுகளை மறைக்கப் பார்ப்பதாக அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சா‌ற்‌றியுள்ளார். இந்த பிரச்சனையில் தற்போதைய நிலைக்கு கருணாநிதியின் திறமையின்மைதான் காரணம் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தன்னலத்திற்காக தலைநகரம் டெல்லிக்கு தன்னுடைய பரிவாரங்களுடன் தலைதெறிக்க ஓடும் கருணாநிதி, தமிழர் நலம் என்றவுடன் யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை என்று புலம்பியிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இதுதான் அவருடைய சுயரூபம்.

நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்டு அணையின் நீர்மட்டத்தை தற்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று 27.2.2006 அன்று உச்ச நீ‌திமன்றம் தீர்ப்பளித்தது.

அதாவது கோடை கால துவக்கத்தில் இது போன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. எனவே உச்ச நீதிமன்ற ஆணைப்படி உடனடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்த ஏதுவாக அணையின் மதகுகளை இறக்கி விடுவதற்கான வாய்ப்பு அப்போது இல்லாமல் போயிற்று. மழை பெய்து அதன் விளைவாக முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசுதான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. எனவே உச்ச நீதிமன்ற ஆணையின் படி அணையின் மதகுகளை இறக்கி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பொறுப்பும் தி.மு.க அரசின் கையில்தான் இருந்தது.

ஆனால் கருணாநிதி அவருக்கே உரிய காரணங்களான தன்னலம், குடும்ப வருமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான ஆணைகளை பிறப்பிக்கவில்லை. இதற்குப் பதிலாக உச்ச நீதிமன்ற ஆணையை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில், கேரள அரசு அவசர அவசரமாக ஒரு சட்டத்தை இயற்றி விட்டதாக தெரிவித்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்தார் கருணாநிதி.

கேரள அரசு இயற்றிய சட்டத்தை கட்டாயமாக பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதிக்கு எந்த காலக் கட்டத்திலிருந்து ஏற்பட்டது? கேரள அரசால் சட்டவிரோதமாக இயற்றப்பட்ட சட்டம் உச்ச நீதிமன்ற ஆணையை தூக்கி எறியும் விதத்திலோ அல்லது மீறும் விதத்திலோ அமைந்துள்ளது என்று எப்போது கருணாநிதி நினைக்க ஆரம்பித்தார்?

இந்தியநாட்டின் மிக உயரிய அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் ஆணையை கையில் வைத்துக் கொண்டு கேரள மாநிலத்தின் உள்ளூர் சட்டத்திற்கு ஏன் கருணாநிதி மதிப்பளித்தார்? ஒன்றல்ல, மூன்று பருவ மழைகளின் மூலம் முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வந்தது. இருப்பினும் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தும் அளவிற்கு அணையின் கதவுகளை இறக்க தமிழக அரசின் அதிகாரிகளுக்கு கருணாநிதி உத்தரவு பிறப்பிக்கவில்லை! இது யாருடைய குற்றம்? கருணாநிதியின் குற்றமா? கேரள அரசின் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் குற்றமா?

முல்லைப் பெரியாறு வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு அனுப்பியதன் மூலம் மிகப் பெரிய அநீதியை உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு இழைத்துள்ளது என்று சலிப்பூட்டும் தனது 5 பக்க அறிக்கையில் தற்போது கருணாநிதி புலம்பியிருக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ள 2006 ஆம் ஆண்டு அனுமதி அளித்த தீர்ப்பின் மீதே உச்ச நீதிமன்றத்திற்கு நம்பிக்கை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தின் மீது பழி சுமத்த கருணாநிதி முயல்கிறார். வழக்கம் போல், கருணாநிதி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். கருணாநிதியின் திறமையின்மை காரணமாக தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோய் விட்டன.

முல்லைப் பெரியாறு பிரச்சனையை அரசியல் சாசன அமர்விற்கு அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தபோது, குறைந்த பட்சம் தமிழகத்தின் எதிர்ப்பையாவது உரத்த குரலில் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்திருக் வேண்டும். இதைக் கூட தி.மு.க அரசு செய்யவில்லை. முல்லைப் பெரியாறு பிரச்சனை அரசியல் சாசன அமர்விற்கு அனுப்பப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தபோது, தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டு அனைத்து பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டன.

தற்போது இந்தப் பிரச்சனையை விசாரிக்க 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நடைமுறையை வைத்துப் பார்த்தால் ஓராண்டிற்கு மூன்று அல்லது நான்கு முறைக்கு மேல் அரசியல் சாசன அமர்வு கூடியது கிடையாது. எனவே கருணாநிதியின் சுயநலத்தால் முல்லைப் பெரியாறு பிரச்சனை கிடப்பில் போடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்தப் பெருமை கருணாநிதியை மட்டுமே சாரும். தற்போது நீலிக் கண்ணீர் வடிப்பதன் மூலம் தான் செய்த தவறை கருணாநிதி மூடி மறைக்க முடியாது'' எ‌ன்று ஜெயல‌லிதா கூறியுள்ளார்.

‌‌நீல‌‌கி‌ரி‌யில் அ.இ.அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்


நீலகிரி ‌மாவட்டத்தில் ‌நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரித்து வழங்க வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் ‌நீ‌ல‌கி‌ரி‌யி‌ல் இ‌ன்று க‌ண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

‌நீல‌கி‌ரி மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலக‌ம் முன்பு நடைபெ‌ற்ற இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கு மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தா‌ங்‌‌கினா‌ர்.

அ‌ப்போது பே‌சிய அவ‌ர், ‌நிவாரண முகா‌ம்க‌ளி‌ல் உள்ளவர்களுக்கு நிவாரண‌த் உத‌வி வழங்குவதில் த‌மிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று குற்றம் சா‌ற்‌றினார்.திங்கள், 16 நவம்பர் 2009

November 15, 2009

இந்தியாவில் எல்லா தொகுதியிலும் இடைத்தேர்தல்

இந்தியாவில் எல்லா தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்தவேண்டும். அதில் கருணானிதிகட்சி தான் பொட்டியிட வேண்டும்! அண்ணன் அழகிரி தான் முன்னின்று வேலை செய்யவேண்டும்!

சாக்கடை சுருளினதனும் கருணாநிதியும் ஒன்னு எப்படி?

சாக்கடை சுருளினதனும் கருணாநிதியும் ஒன்னு எப்படி?
ஒன்றுக்குமேற்பட்ட பெண்களுடன் தொடர்பு, அதிகபடியான சுயநலம், சாகும் வரையிலும் பதவி,பண பித்து , அதற்காக எதையும் செய்யல் , ஒரு பிரச்சனைக்காக இன்னொரு பிரச்சனையெய் ஏற்படுத்துதல், பொய், புரட்டு, பித்தலாட்டம், செத்து போனவனை சாட்சியாக க்குப்பிடுதல் , அடுத்தவனை ஒளித்துக்கத்டியாவது வாழ்தல் ....சென்னையில் என் முகவரியை தொலைக்க செய்துவிட்டான் சுருளி .....
கருணாநிதி கும்பலுக்கா உங்கள் வாக்கு?

ஆண்டவன் தான் இந்த பாழாய் போன மக்களை காப்பற்றனும்!

எங்களுக்கு ஒரு ரூபாய் அரிசியும் , டிவி யும் போதும் . எவன் எத்தனை லட்சம் கோடி கொள்ளை அடித்தாலும் பரவாயில்லை என்று மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். பண பலம், உருட்டல் , மிரட்டல், அரசு அதிகாரிகளின் நியாயமற்ற தன்மை போதும் ஆண்டவன் தான் இந்த பாழாய் போன மக்களை காப்பற்றனும்!

மூன்று மணிநேர திரையரங்கு சுகமும் அறுபத்துயொருவருட கால போராட்ட வலிகளும்

மூன்று மணிநேர திரையரங்கு சுகமும் அறுபத்துயொருவருட கால போராட்ட வலிகளும்







மூன்று மணிநேர திரையரங்கு சுகமும் அறுபத்துயொருவருட கால போராட்ட வலிகளும்

இந்திய தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சி நிறுவனங்களும், அவர்களின் ஏனைய நிறுவனங்களும் தமது பொருளாதார வளர்ச்சிகளுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஈழத்தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்ற மடல் ஒன்றை எனது நண்பர் ஒருவர் கடந்த வாரம் எனக்கு அனுப்பியிருந்தார்.

கருணாநிதியின் குடும்ப சொத்தாக விளங்கும் தொலைக்காட்சி நிறுவனங்களில் சன் தொலைக்காட்சி நிறுவனம், சன் திரைப்பட நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் என்பன முக்கியமானவை. இந்த தொலைக்காட்சிகள் ஈழத்தமிழ் மக்களின் அண்மைய பேரவலங்களை முற்றாகவே புறக்கணித்திருந்தன.

ஒரு இனம் அழிவின் விழிம்பில் அவலக்குரல் எழும்பிய போதும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. தனது மூன்று மணிநேர உண்ணாவிரதத்தின் மூலம் வன்னியில் போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற கருணாநிதியின் போலியான பிரச்சாரங்களை மிகைப்படுத்திய இந்த ஊடகங்கள் இறுதிக்கட்ட தாக்குதல்களின் மோசமான விளைவுகளை தமிழகத்தில் இருட்டடிப்பு செய்திருந்தன.

மேலும் இந்த நிறுவனங்கள் சிறீலங்கா அரசின் தாக்குதல்களிலும், குண்டு வ நன்றி
Thaiyagan S

திருப்பூர் நித்தியின் அன்பு வேண்டுகோள்


http://nellaicityaiadmk.blogspot.com/
எங்கள் உயிர் நாடியே! எங்கள் உயிர் சுவாசமே!

"நீரின்றி அமையாது உலகு!
அதுபோல் நீர் இன்றி அமையாது எங்கள் வாழ்வு!!

கட்டளையிடுங்கள், எங்கள் அன்னையே!

"சூரியனை பிடித்து, உங்கள் காலணியாக்க வேண்டுமா! அல்லது இமயமலையை இல்லாமல் செய்ய வேண்டுமா! அணுவை அண்டம்மாக்க வேண்டுமா! அல்லது அண்டத்தை அணுவாக்க வேண்டுமா! கடல் நீரை காற்றாக வேண்டுமா! அல்லது காற்றை கடல் நீர்ராக்க வேண்டுமா! நீங்கள் சொல்லுங்கள் எங்கள் இதயதெய்வமே!
நீங்கள் சொல்லி முடிப்பதற்குள், நாங்கள் செய்து முடித்து இருப்போம்! இப்படிக்கு உங்கள் நலம் விரும்பும் உங்கள் பக்த கோடிகள்!!

ஒரே கடவுள் இதயதெய்வம் அம்மா! ஒரே கோவில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்!"
நன்றி என் அன்பு தம்பி நித்தி திருப்பூர் அதிமுக அம்மாவின் தீவிர பக்த்தன்

November 11, 2009

அரசுக்கு ஜெயலலிதா வலியுறுத்தல் வெள்ள நிவாரண நிதியை 3 மடங்கு உயர்த்துங்கள்.

அரசுக்கு ஜெயலலிதா வலியுறுத்தல் வெள்ள நிவாரண நிதியை 3 மடங்கு உயர்த்துங்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை;மழையால் ஆண்டிப்பட்டி தொகுதியில் வண்டியூர்,ராயர்கோட்டை,தண்டியகுளம் உட்பட பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகள் சரியாக தூர்வாரப்படாததால்,கூழையாறு,வளவனாறு ஆகியவற்றில் உடைப்பு ஏற்பட்டு 2.5 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.கடலூர்,விழுப்புரம்,ராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்கலில்,கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாமல் வருமானம் இன்றி தவிக்கிறார்கள்.சென்னையில் மழைக்காலங்களில் பக்கிகாம் கால்வாயிலிருந்து வெளியேறும் நீர் குடியிருப்புகளுக்குச் செல்லாமல் ஒக்கியம் மடுவு வழியாக நேரடியாக கடலுக்கு எடுத்துச் செல்லும் வகையில் 3 கால்வாய்களை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு 2005ம் ஆண்டில் பொதுப்பணித் துறைக்கு நான் உத்தரவிட்டேன்.பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டது திமுக அரசு என்னுடைய உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்குமேயானால் மேற்படி பகுதிகள் இப்பொது நீரில் மூழ்கியிருக்காது.2005ம் ஆண்டில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது அனைவருக்கும் தலா 2000 ரூபாய் உட்பட வெள்ள நிவாரணத்தொகுப்பு வழங்கப்பட்டது.இப்பொது விலைவாசி 3 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.எனவே பயிர் இழப்பீட்டுத் தொகையும்,வெள்ளநிவாரணத் தொகையையும் 3 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும்.மழை வெள்ளத்தால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கவும்,சாலைகளை செப்பனிடவும்,சீராக மின்சாரம் வழங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

November 10, 2009

காஸ் சிலிண்டர் பிரச்னை : அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நவம்பர் 10,2009,00:00

சென்னை : "மக்களின் தேவைக்கேற்ப காஸ் சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் வினியோகம் செய்ய வலியுறுத்தியும், ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் பெற்றுவந்த மானியத்தை திரும்ப வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.



அவரது அறிக்கை: ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த மானியத்தை தி.மு.க., அரசு சமீபத்தில் ரத்து செய்துவிட்டது. மக்களின் தேவைக்கேற்ப காஸ் சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் அனைவருக்கும் பாரபட்சமின்றி வினியோகம் செய்ய வலியுறுத்தியும், ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் பெற்றுவந்த மானியத்தை திரும்ப வழங்க வலியுறுத்தியும், வடசென்னை அ.தி.மு.க., சார்பில் நாளை காலை 9.30 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாவட்ட செயலாளர் சேகர்பாபு முன்னிலையில், மைத்ரேயன் எம்.பி., தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கும். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

November 08, 2009

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது பாசறை நிர்வாகி கூட்டதில் திருDr. S.வெங்கடேஷ் M.D அவர்கள் ஆற்றிய உரை

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது.நாள்;07.11.2009 இடம்;தென்காசி இசக்கி மகால் அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்தது என இளைஞர்கள் பாசறை நிர்வாகி கூட்டதில் திருDr. S.வெங்கடேஷ் M.D அவர்கள் பேசினார்கள். மேலும் அவர்கள் ஆற்றிய உரையில்.....யாராலும் சிந்திக்க முடியாத திட்டமான இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை திட்டத்தை அம்மா செயல்படுத்தி வருகிறார்,யாராலும் சிந்திக்க முடியாத திட்டமான இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை திட்டத்தை அம்மா செயல்படுத்தி வருகிறார்.அம்மா அவர்கள் ஆட்சியில் கடையநல்லூர்-புளியங்குடி கூட்டு குடிநீர் திட்டம்,செங்கோட்டை-குற்றாலம் குடிநீர் திட்டம்,நான்குநேரி-திசையன்விளை குடிநீர் திட்டம்,சேந்தமங்கலம்-பாப்பாக்குடி குடிநீர் திட்டங்கள்,வணிக வளாகங்கள்,நெசவாளர் கூடம்,கால்நடை மருத்துவமனை,ஆரம்பசுகாதார நிலையங்கள்,அணைகள்,கிராமச்சாலைகள்,என ஆட்சியில் இருக்கும் போது நெல்லை மாவட்டத்திற்கு பல அற்புதமான திட்டங்களை தந்தவர் அம்மா அவர்கள்.இதுவரை தனிமரமாக இருந்த இளைஞர் மற்றும் இளம்பெண்களை அதிமுக என்னும் தோப்பாக மாற்றியது இந்த பாசறை தான்.அதிமுக ஆட்சியில் அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகம் இன்று அமைதியிழந்து காணப்படுகிறது.வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்த தமிழகம் இன்று முடமாகிவிட்டது.இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites