.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் தங்கத்தாரகை இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 62 வது பிறந்தநாள் மற்றும் புரட்சித்தலைவியின் ஆட்சியில் அரசின் சாதனைகளையும் தற்போதைய மைனாரிட்டி அரசின் அவலநிலையின் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நாள் 25.02.2010 அன்று இரவு 7 மணிக்கு V.K புரம் மூன்று விளக்கு திடல் ல் மாவட்ட அம்மா பேரவை இனைச்செயலாளர் திரு.இசக்கி சுப்பையா அவர்கள் தலைமையில் மற்றும் கழக கொடி எற்றி பின்பு ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம்,ஏழை எளியோருக்கு வேஷ்டி,சேலை,குடம் வழங்கி சிறப்பித்தார்கள்.விழா ஏற்பாடுகளை நகர செயலாளர் திரு குமார் பாண்டியன் ,சிற்ப்புரை:KK கலைமணி அவர்கள்,மாவட்ட செயலாளர் ராஜா P செந்தூர் பாண்டியன் அவர்கள்,M.சக்திவேல் முருகன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.
திமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் காகித வடிவில்தான் இருக்கின்றன என்பதற்கு மற்றுமொரு எதுத்துக்காட்டு வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு,மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்தப் புள்ளியும் கோரப்பட்டது.இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா 2007ம் ஆண்டு நடந்தது.மூன்று ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை இதனால் கணேஷ் நகர்,ஜானகிராம் நகர்,ரெட்டி காலனி,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.இதுமட்டுமல்லாமல் ரயில்வே நிர்வாகத்துடன் திமுக அரசு ஒத்துழைப்பு அளிக்காதது குறைவான நிதி ஒதுக்கீடு ஒப்பந்தக்காரர் பிரச்னை போன்ற காரணங்களால் சுரங்கப்பாதை பணி தேக்கம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர் எனவே இந்த சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்கக் கோரியும் திமுக அரசை கண்டித்தும்,அதிமுக சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.மருத்துவர் அணி தலைவர் மைத்ரேயன் M.P தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் வட சென்னை மாவட்ட செயலாளர் சேகர்பாபு M.L.A முன்னிலை வகிக்கிறார்.இவ்வாறு ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.
அரிசி,சர்க்கரை,பருப்பு,வகைகள்,சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் 4 ஆண்டாக ஏறிக் கொண்டே போகின்றன.இதனால் ஏழை,நடுத்தர மக்கள் அல்லல்படுகின்றனர்.தொடரும் மின்வெட்டு,மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தொழில் உற்ப்பத்தி குறைந்து வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சிக்கும்,தொழில் வளர்ச்சிக்கும் எதிர் மறையான சூழ்நிலைபிறந்தநாள் விழாவில் ஆடம்பரம் வேண்டாம். தமிழகத்தில் நிலவுகிறது.கொசுத் தொல்லை மக்களை படாதபாடு படுத்திக் கொண்டு இருக்கிறது.இதனால் புதுப்புது நோய்களுக்கு மக்கள் ஆளாக்கப் பட்டுள்ளதோடு நிம்மதியாக தூங்க கூட முடியாத நிலை உள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் 5000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது.மின் கட்டணம் உயரப் போகிறது என்பன போன்ற செய்திகள் மக்களிடையே மேலும் பீதியை கிளப்பியுள்ளன.தமிழக மக்கள் வேதனையில் தவிக்கின்றனர்.இந்த நிலை மாற வேண்டும் மக்கள் மனது வைத்தால் மாறும் இந்தச் சூழ்நிலையில் என் பிறந்தநாளன்று ஆடம்பரமான கொண்டாட்டங்களை நடத்த வேண்டாம் என்று அதிமுகவினரை கேட்டுக் கொள்கிறேன்.பிறந்தநாளன்று என்னை சந்திப்பதற்காக வருவதை தவிர்த்து ஏழைகளின் வாட்டத்தை சிறிதளவாவது போக்கும் வகையில் அவர்களுக்கு பொருளுதவி,மருத்துவ உதவி,அன்னதானம் ரத்ததானம் போன்ற நற்காரியங்களில் அதிமுகவினர் ஏடுபட்டால் அது எனக்கு மிகுந்த மகிழையைத் தரும்.
டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் 60வது ஆண்டு விழா 25.01.2010 அன்று நடந்தது.அந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் கலந்து கொண்டார் பின்னர் அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அன்று மாலை சென்னை திரும்பினார்.அவரை ஓ.பன்னீர்செல்வம்,ஜெயகுமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஜெயலலிதா அவர்கள்
திருநெல்வேலி : நெல்லையில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய எஸ்.ஐ., வெற்றிவேலை காப்பாற்ற ஆம்புலன்சுக்காக அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். தங்களுடன் வந்த வாகனம் ஒன்றில் முதலிலேயே எஸ்.ஐ.,யை மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சிக்கவில்லை.
திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ., வெற்றிவேல்(43), நேற்று முன்தினம் ஆம்பூர் அருகே ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் கொலை செய்யப்பட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் ஆம்பூர் அருகே இந்த கோர சம்பவம் நடந்தது. அமைச்சர்களுடன் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் குற்றவாளிகளை துரத்திச்சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியும் அவர்கள் தப்பிவிட்டனர். எஸ்.ஐ., வெற்றிவேல் வெட்டுக்காயங்களுடன் நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அமைச்சர்கள், கலெக்டர் ஜெயராமன், சுகாதார உயர் அதிகாரிகளுடன் அத்தனை வாகனங்கள் இருந்தும், 108 வாகனம் வருவதற்காக காத்திருந்தனர்.
பன்னாட்டு,உள்நாட்டு நிறுவனங்களை வரவேற்க்கும் வகையில் பாரம்பரிய மீனவர்களை நசுக்கும் வகையில் கடல் மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை வரைவு சட்டத்தை கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.இந்த சட்டத்தின் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.இந்த மசோதா ஒருபோதும் தாக்கல் செய்யப்படக்கூடாது என்பது அதிமுக வின் நிலைப்பாடு புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு இந்த சட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.சுனாமியால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு அரசு சார்பில் கல் வீடும்,பழுதடைந்த வீடுகளை செப்பனிடுவதற்கு மானியமாக ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அளிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்தது.இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை.சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்காத புதுச்சேரி அரசை கண்டித்தும் மீனவர் விரோத சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற கோரியும் புதுச்சேரி அதிமுக சார்பில் 9ம் தேதி காலை 9.30 மணிக்கு புதுச்சேரி பழைய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ஆளுநர் உரை கடந்த நான்கான்டு உரைகளின் மறுபதிப்பாக அமைந்துள்ளதே தவிர தொலைநோக்கு திட்டங்கள் கொண்ட உரையாக அமையவில்லை.கருப்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ,2 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் ஆனால் லாரி வாடகை மற்றும் கட்டுமான ஊக்கத்தொகையுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.1500ஜ மீண்டும் ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பது கரும்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக தொழில் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர்.மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர் அவர்களுக்கு பதில் ஒய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் நியமிக்க அரசு ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது.பொதுநலன் கருதி அரசு ஊழியர்களின் பணிகளை நீட்டிக்கவும்,மறு வேலை வாய்ப்பு அளிக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு அதன் படி அரசு விரும்பினால் எந்த அரசு ஊழியரின் பனிக் காலத்தையும் நீட்டிக்கலாம்.ஆனால் அனைத்து மட்டங்களிலும் காலியாக உள்ள இடங்களை ஒய்வு பெற்றவர்களை கொண்டு நியமிக்கலாம் என்று அரசாணை பிறப்பித்திருப்பது மரபு மீறிய செயல் தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தலில் முறைகேடுகளை அரங்கேற்ற அச்சாரமாக இந்த ஆணை இருக்கிறதோ என்ற எண்ணம் எழுந்துள்ளது இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை கேட்டு கொள்கிறேன்.இந்த அரசானையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களில் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் இளைஞர்களை நிரப்ப வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அம்மா ஜெயலலிதா கூறியுள்ளார்.