This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

June 30, 2010

திட்டக்குடியில் நடந்த அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டத்தில்

திட்டக்குடியில் நடந்த அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை பேசினார். அருகில் எம்.எல்.ஏ.,க்கள் அருண்மொழிதேவன், செல்வி ராமஜெயம்.

.

June 29, 2010

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு : ஜூலை 5ம் தேதி அ.தி.மு.க.,ஸ்டிரைக்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 5ம் தேதி நாடு தழுவிய ஸ்டிரைக் நடைபெறும் என அ.தி.மு.க., - ம.தி.மு.க., ஆகிய எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன. பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெ‌ண்ணெய் விலையை கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஸ்டிரைக் நடத்தப்போவதாக அ.தி.மு.க., அறிவித்துள்ளது. இது குறித்து ஜெயலலிதா, வைகோ உள்பட 7 கட்சித்தலைவர்கள் கையெழுத்திட்டு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் . அந்த அறிக்கையில் : பெட்ரோல், டீசல் விலையை வைத்துத்தான் அனைத்துப் பொருட்களின் விலைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக்கொண்டே போனால், அனைத்துப் பொருட்களின் விலைகளும் மேலும் உயர்ந்து கெண்டே போகும். பெட்ரோல் மற்றும் டீசலைத் தவிர, இந்த முறை மண்ணெண்ணெய் மற்றும் காஸ் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலைக்கேற்ப பெட்ரோலின் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது. டீசல் விலையையும் இதே பாணியில் உயர்த்திக் கொள்வதற்கான அறிவிப்பு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது . மத்திய அரசின் இது போன்ற அறிவிப்பின் காரணமாக சரக்குக் கட்டணம், லாரி, வேன் வாடகை, என அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்படும் . பெட்ரோல், டீசல், காஸ். மண்ணெண்ணெய் விலை உயர்வுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை உயர்வை உடனே வாபஸ் பெற வலியுறுத்தியும், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோலின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரியும், ஸ்டிரைக் நடத்தயிருப்பதாக தெரிவித்ததாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு இந்தியா திரும்பிய பிரதமர் மன்‌மோகன் சிங் : பெட்ரோல் டீசல் விலையை சீரமைப்பது தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை பெரிய விஷயமாக மக்கள் மத்தியில் எதிர்கட்சிகள் தூண்டி விடக்கூடாது என்றார். விரைவில் டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் திட்டமும் அமலுக்கு வரும் என கூறியுள்ளார்.

.

.

தேனியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

பெரியாறு, வைகை கரையோரங்களில் உள்ள கிணறுகள், பைப் லைன், மோட்டார்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து தேனியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

.

ஆயுள் கைதிகளை விடுவித்தால் தேர்தலில் விபரீதம் ஏற்படும்: அம்மா அவர்கள்

சென்னை :"ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என, தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன். இதனால், வரும் சட்டசபை தேர்தலில் விபரீதம் ஏற்படலாம்' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:"ஜனநாயகம், சோஷலிசம், தேசியம் ஆகிய மூன்றில் ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டிருக்கிறது' என்று வேதனையுடன் சொன்னவர் அண்ணாதுரை. அவரது கொள்கைக்கு மாறாக, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நோக்கோடு, அவருடைய நூற்றாண்டு தினத்தை முன்னிட்டே, 2008ம் ஆண்டு ஏழாண்டுகள் சிறைவாசம் முடித்தவர்கள் உட்பட 1,405 ஆயுள் தண்டனைக் கைதிகள் ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்."மக்கள் நம்பிக்கையை இழந்து, 2009ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் ஜனநாயக முறைப்படி மக்களை ஓட்டளிக்க விடாமல், குறுக்கு வழியில் வன்முறையாளர்கள் மூலம் தேர்தலை சந்திக்க ஆயுள் கைதிகளை விடுவித்துள்ளனர்' என்று, அப்போது கண்டனம் தெரிவித்தேன்.

இந்த குற்றவாளிகளில் பெரும்பாலானோர் தி.மு.க.,வினர்; இதில் மதுரை லீலாவதி கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளும் அடங்குவர். இவர்கள் உள்ளாட்சி மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களில் தி.மு.க., விற்கு ஆதரவாக செயல்பட்டனர் என்பது நாடறிந்த உண்மை.தற்போது, செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகளை, முன்கூட்டியே விடுதலை செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது; கோர்ட்டை அவமதிக்கும் செயல். வரும் சட்டசபைத் தேர்தலில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, ஓட்டளிக்க விடாமல் ஜனநாயகப் படுகொலையை செய்யும் திட்டமோ, என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.மனித சமுதாயத்தில் தவறுகள் நடக்க கூடாது என்பதற்காக, கொலைக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை தரப்படுகிறது. அவர்களை முன்கூட்டியே விடுவிப்பது, சட்டத்திற்குப் புறம்பான, கொலையாளிகளை ஊக்கப்படுத்தும் செயல். இதுபோன்று முன்கூட்டியே விடுவித்தால், கொலை, கொள்ளை போன்ற கொடூர சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும்.


சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசே, சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபடுவது வேதனைக்குரியது.கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல், காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, பொன்னையாறு போன்ற நதிநீர்ப் பிரச்னை, பார்லிமென்ட்டில் தமிழில் பேசும் உரிமை, ஐகோர்ட்டில் தமிழ் என்று எதையும் பெற்றுத் தரமுடியவில்லை. தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. தமிழக மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை, ஓட்டுரிமை. அதையும் ஆயுள் கைதிகளை விடுவிப்பதன் மூலம் பறிக்க நினைக்கின்றனர்.

"மக்களாட்சியிலும் சில பல கேடுகளும், கொடுமைகளும் ஏற்பட்டு விடுகின்றன என்றாலும், அவைகளை நீக்கிடும் உரிமையும், போக்கிடும் வாய்ப்பும் மக்கட்கு கிடைக்கிறது' என்றார் அண்ணாதுரை. மக்களுக்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பான ஓட்டுரிமையிலும் மண் அள்ளிப் போடுவதா?இதுபோன்ற ஜனநாயக விரோத செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா அவர்கள்  தெரிவித்துள்ளார்.

.

June 28, 2010

அ.தி.மு.க., கூட்டத்தில் வன்முறை

வேடசந்தூர் : வேடசந்தூர் அருகே அ.தி.மு.க., நடத்திய தெருமுனை பிரசாரத்தில் மர்ம கும்பல் கற்கள் மற்றும் சோடா பாட்டீல் வீசி சராமாரியாக தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

.

June 27, 2010

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்தாத தி.மு.க

சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து கர்நா டக மாநில அ.இ.அ.தி.மு.க. சார்பில்  பெ‌ங்களூரு‌வி‌ல் க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்‌‌க‌ட்‌சி‌யி‌ன் பொதுச் செயலர் ஜெயலலிதா  அவர்கள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌‌ர்.


இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் போர் முடிந்து ஓர் ஆண்டிற்கும் மேலாகிவிட்டது. இருப்பினும் இடம் பெயர்ந்த தமிழர்களை தங்களுடைய சொந்த இடங்களுக்கு இன்னமும் அனுப்பவில்லை. இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த நாட்டிலேயே, இராணுவ முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


இவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அந்நாட்டு அரசு எடுக்கவில்லை; எடுப்பதாகவும் தெரியவில்லை. தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்குப் பதிலாக, தமிழர் வாழ் பகுதியான வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு இராணுவம் ஈடுபட்டு வருவதாகவும், தமிழர்களின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும்,


தமிழில் இருந்த சாலைகளுக்கு சிங்களப் பெயர்கள் வைக்கப்படுவதாகவும், தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதாகவும், இதன் மூலம் அங்குள்ள நிலங்கள் எல்லாம் சிங்கள நிலங்கள் என்று திரித்துக் கூற முயற்சி நடப்பதாகவும், போரின் போது சிதைந்து போன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றை கட்டித் தர நடவடிக்கை எடுக்காமல், புத்த விகாரைகள் புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில் தமிழ்ப் பகுதிகள் சிங்களமயமாக்கப்படுகின்றன.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் இடம் பெயர்ந்துள்ள தமிழர்களை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு இலங்கை அரசு அனுப்பி வைக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அப்படியே அனுப்பினாலும் அங்கு சென்று அவர்களால் நிம்மதியாக வாழ முடியுமா? இந்த நிலைமையில், தமிழர்களின் மறுவாழ்விற்காக 1,500 கோடி ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு அளித்திருக்கிறது. வெறும் நிதி உதவியை சிங்கள அரசிடம் அளித்ததன் காரணமாக, அங்குள்ள தமிழர்களுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை.


இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசால் கொடுக்கப்பட்ட ரூ.1,500 கோடி பணம் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும். தமிழ்ப் பகுதிகள் எல்லாம் சிங்கள மயமாக்கப்படுவதாக செய்திகள் வருவது குறித்து ஆராய்ந்து, அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இலங்கைத் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகளான மறுவாழ்வு, விவசாய நிலங்களை சீரமைத்தல், நீர் ஆதாரங்களை சீரமைத்தல், கல்வி நிறுவனங்களை சீரமைத்தல், வழிபாட்டுத் தலங்களை கட்டித் தருதல், அனைத்து நிவாரண உதவிகளும் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை சென்றடையும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பணியில் அமர்த்துதல், பத்திரிகையாளர்களை அனுமதித்தல் போன்ற பணிகளை இலங்கை அரசு மேற்கொள்கிறதா என்பதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும். இவற்றையெல்லாம் இந்திய அரசு மேற்கொள்ள மத்திய அரசை தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி வற்புறுத்த வேண்டும்.

இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து கர்நா டக மாநில அ.இ.அ.தி.மு.க. சார்பில்  காலை 11 மணி அளவில், பெங்களூரு எம்.ஜி.ரோடு, மகாத்மா காந்தி சிலை அருகில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டம் க‌ட்‌சி‌யி‌ன் தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் பாலகங்கா தலைமையிலும், கர்நாடக மாநில செயலர் புகழேந்தி முன்னிலையிலும் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா அவர்கள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

.

June 20, 2010

இலங்கையில் தமிழ் பெயரில் இருந்த ஊர்களுக்கு,சாலைகளுக்கு சிங்கள பெயர்

இலங்கையில் தமிழ் பெயரில் இருந்த ஊர்களுக்கு,சாலைகளுக்கு சிங்கள பெயர் ஜெயலலிதா அவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருவதாகவும்,தமிழர்களின் பண்பாடி,சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதாகவும் தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள்,தமிழ் பெயரில் இருந்த சாலைகளுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதாகவும் இதன் முலம் அங்குள்ள நிலங்கள் எல்லாம் சிங்கள நிலங்கள் என்று திரித்துக் கூற  முயற்சி நடப்பதாகவும் போரின் போது சிதந்து போன  தமிழர்களின் கோவில்கள்,தேவாலயங்கள்,மசூதிகள் ஆகியவற்றை கட்டி தர நடவடிக்கை எடுக்காமல் புத்த விகாரைகள்  புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல் வருகின்றன மொத்தத்தில் தமிழ்ப் பகுதிகள் சிங்கள மயமாக்கப்படுகின்றன.இப்படிப்பட்ட  சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவது என்பது எப்படி சாத்தியமாகும் இந்த நிலையில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் 50,000 வீடுகள் கட்டி தர இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.எற்கனவே 500 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டதே?அந்த நிதி இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்காக எந்த அளவிற்க்கு உபயோகப்படுத்தப்பட்டது என கேட்டறிந்ததா?தமிழர்களின் மறுவாழ்வு குறித்துக் கேட்டபோது அந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார் இலங்கை அதிபர்.தற்ப்போது பாரத பிரதமரிடம் இந்த ஆண்டு இறுதிக்குள் 47,000 தமிழர்கள் குடியமர்த்தப் படுவதாக உறுதி அளித்து இருக்குறார்.இந்த உறுதிமொழியெல்லாம் வாயளவில் தான் இருக்கிறதே தவிர செயல்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.இலங்கைத் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகளான இலங்கை வட பகுதி முகாம்ளில் இன்னும் 1 லட்சம் பேர் ஆதரவற்றவர்களாய் முகாம்களில் உள்ளனர்.அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.மறு குடியேற்றப்பட்ட  மக்களுக்கு நிவாரணம் செய்து தர வேண்டும்.அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கபட வேண்டும்.அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் சரிசெய்யப்பட வேண்டும்.மக்களுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்.கல்வி நிலையங்கள் அமைக்கப் பட வேண்டும்.புதிய பள்ளிகள் கட்டப்பட வேண்டும்.பழைய பள்ளிகள்  புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.போரினால் கணவனை இழந்த விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.போரின் போது கற்ப்பழிக்கப் பட்ட சிறுமிகளுக்கும்,பெண்களுக்கும் கவுன்சிலிங் தரபட வேண்டும்.கோவில்கள்,தேவாலயங்கள்,மசூதிகள் புத்த மடாலயங்களாக ஆக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.தண்ணார்வத் தொண்டு நிறுவனங்கல் அங்கு பணியாற்ற அனுமதிக்கபட வேண்டும்.பத்திரிகையாளர்கள் தமிழர்களை சந்திக்க அனுமதிக்க பட வேண்டும் இவ்வாறு அம்மா அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளார்.

.

June 16, 2010

நெல்லை புறநகர் மாவட்டத்தின் சார்பாக கழக வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது


கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை, அவர்களது இல்லத்தில், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழக செயலாளர் ராஜா P.செந்தூர்பாண்டியன் நேரில் சந்தித்து, திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், "கழக வளர்ச்சி நிதியாக" 40,78,800/_ (நாற்பது லட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து எண்ணூறு) ரூபாயை வழங்கினார்.


.

June 06, 2010

orkut - photos

June 03, 2010

ராஜ்யசபா வேட்பாளர்கள் தேர்வில் ஜெயலலிதா அவர்கள் அதிரடி : மனோஜ் பாண்டியன், ராமலிங்கம் போட்டி


தென் மாவட்டங்களில் நாடார் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன், கட்சியை விட்டு நீக்கப் பட்ட முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு பதிலடி கொடுக் கும் வகையில், கவுண்டர் இனத் தைச் சேர்ந்த மாவட்டச் செயலர் கே.வி.ராமலிங்கம் ஆகியோரை ராஜ்யசபாவுக்கு போட்டியிடும் வேட்பாளர்களாக அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.

தமிழகத்திலிருந்து ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் இந்த மாதம் முடிகிறது. புது எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்க மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. தி.மு.க., சார்பில் கே.பி.ராமலிங்கம், தங்கவேல், செல்வகணபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட் பாளரின் பெயர் இன் னும் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க., சார் பில் மனோஜ்பாண்டியன், கே.வி.ராமலிங்கம் போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். மனோஜ் பாண்டியன் தற்போது வக்கீல் பிரிவு மாநில செயலராக உள்ளார். இவரது தந்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன். தாயார் சிந்தியா பாண்டியன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர். 38 வயதாகும் மனோஜ் பாண்டியன், சட்டப் படிப்பை சென்னை சட்டக் கல்லூரியில் முடித்தார். சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.எல்., முடித்துள் ளார். 1993ம் ஆண்டு அ.தி.மு.க., வில் இணைந்தார். ஜெயலலிதா முன்னிலையில் கடந்த 1997ம் ஆண்டு மனோஜ் பாண்டியனின் திருமணம் நடந்தது. வக்கீல் பிரிவின் மாநில இணைச் செயலராகவும், 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தொகுதியின் எம்.எல். ஏ.,வாகவும் பணியாற்றினார்.

ஜெயலலிதா பரிந்துரையின் மூலம் கடந்த ஆண்டு வாஷிங் டன் நகரில் நடந்த, "இளந்தலைவர் வருகை' என்ற மாநாட்டில் மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டார். அம்பேத்கர் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப் பினராகவும், முன் னாள் ராணுவ வீரர் வாரிய உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது, ஐகோர்ட் டில் குற்றவியல், சிவில், அரசியல் சட்டம் தொடர் பான வழக்குகளில் ஆஜராகி வருகிறார். தென் மாவட்டத்திற்கும், நாடார் சமுதாயம் மற் றும் கிறிஸ்தவ மதத் திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவருக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்பட்டுள்ளது. லோக்சபா எம்.பி.,க்களில் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் இடம் பெறவில்லை என்பதாலும், நாடார் சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க.,வில் இணைந்ததாலும் அச்சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக் கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் தேவர் சமுதாய ஓட் டுக்கள் அ.தி.மு.க., விற்கு பெருவாரியாக கிடைக்கவில்லை. எனவே, பெரும் பான்மை சமுதாயமாக விளங்கும் நாடார் சமுதாய ஓட் டுக்களை கவரும் வகையில் மனோஜ் பாண்டியனுக்கு எம்.பி., பதவி வழங் கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகர் மாவட்டச் செயலர் கே.வி.ராமலிங்கத் திற்கு "ஜாக்பாட்'டாக ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைத் துள்ளது. முன்னாள் அமைச்சர் முத்துசாமி அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டதால் அவரது சொந்த மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவும், முத்துசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவரான ராமலிங்கத்திற்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கொங்கு மண்டலத்தில் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த திருப்பூர் சிவசாமி, பொள்ளாச்சி சுகுமார் ஆகியோர் லோக்சபா எம்.பி.,க் களாக உள்ளனர். தற்போது ராமலிங்கத்திற்கு பதவி கொடுக் கப்படுவதால் கவுண்டர் சமுதாயத்திற்கு மூன்று எம்.பி.,க்கள் கிடைத்துள்ளனர். ராமலிங்கத்தின் தந்தை வேலுச் சாமி மறைந்து விட்டார். தாயார் அம்மினி அம்மாள். மனைவி அம்மனி அம்மாள். இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 1984ம் ஆண்டு கட்சியில் இணைந்தார். 1994ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தாராபுரம் ஒன்றிய செயலராக பணியாற்றியுள்ளார். 2006ம் ஆண்டு முதல் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலராக பணியாற்றி வருகிறார்.     

. நன்றி தினமலர்

June 01, 2010

திமுகவின் அராஜக அரசியலை கண்டித்து தூத்துக்குடி நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் கண்டன பொது கூட்டம்


புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி திமுகவின் அராஜக அரசியலை கண்டித்து தூத்துக்குடி நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் கண்டன பொது கூட்டம்.
இடம் :1ஆம் கேட் காந்தி சிலை முன்பு தேதி :05 .06 .2010
தலைமை : இரா.ஹென்றி அவர்கள்
முன்னாள் மாவட்ட செயலாளர்

வரவேற்புரை : S.T கருணாநிதி அவர்கள் பேச்சாளர்

சிறப்புரை : நெல்லை பாலாஜி அவர்கள் தீபொறி ஆறுமுகம் அவர்கள்
தலைமை கழக பேச்சாளர் தலைமை கழக பேச்சாளர்

பள்ளத்தூர் D .முருகேசன்
மாவட்ட செயலாளர்

நன்றயுரை: செ.ராஜா சிங்
மாவட்ட தலைவர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை

கூட்ட ஏற்பாடு : C. நம்பிராஜன் பி.எஸ்.சி.,பி.எல்
நகர செயலாளர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை

நான்கு ஆண்டுகால திமுக அரசின் தொடர் மின்வெட்டு , விலைவாசி உயர்வு ,சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து நடைபெறும் இந்த கண்டன பொது கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையினர்,பிற அணி நிர்வாகிகள்,கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தூத்துக்குடி நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில்
கேட்டு கொள்கிறேன் . நன்றி
இப்படிக்கு அம்மாவின் உண்மை தொண்டன்
C. நம்பிராஜன் பி.எஸ்.சி.,பி.எல்
நகர செயலாளர்
இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை
orkut link
.

February 26, 2010

புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 62 வது பிறந்தநாள்

கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் தங்கத்தாரகை இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 62 வது பிறந்தநாள் மற்றும் புரட்சித்தலைவியின் ஆட்சியில் அரசின் சாதனைகளையும் தற்போதைய மைனாரிட்டி அரசின் அவலநிலையின் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நாள் 25.02.2010 அன்று இரவு 7 மணிக்கு V.K புரம் மூன்று விளக்கு திடல் ல் மாவட்ட அம்மா பேரவை இனைச்செயலாளர் திரு.இசக்கி சுப்பையா அவர்கள் தலைமையில் மற்றும் கழக கொடி எற்றி பின்பு ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம்,ஏழை எளியோருக்கு வேஷ்டி,சேலை,குடம் வழங்கி சிறப்பித்தார்கள்.விழா ஏற்பாடுகளை நகர செயலாளர் திரு குமார் பாண்டியன் ,சிற்ப்புரை:KK கலைமணி அவர்கள்,மாவட்ட செயலாளர் ராஜா P செந்தூர் பாண்டியன் அவர்கள்,M.சக்திவேல் முருகன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

.

February 19, 2010

ரயில்வே சுரங்கப்பாதை பணி தேக்கம் சென்னையில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் காகித வடிவில்தான் இருக்கின்றன என்பதற்கு மற்றுமொரு எதுத்துக்காட்டு வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு,மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்தப் புள்ளியும் கோரப்பட்டது.இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா 2007ம் ஆண்டு நடந்தது.மூன்று ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை இதனால் கணேஷ் நகர்,ஜானகிராம் நகர்,ரெட்டி காலனி,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.இதுமட்டுமல்லாமல் ரயில்வே நிர்வாகத்துடன் திமுக அரசு ஒத்துழைப்பு அளிக்காதது குறைவான நிதி ஒதுக்கீடு ஒப்பந்தக்காரர் பிரச்னை போன்ற காரணங்களால் சுரங்கப்பாதை பணி தேக்கம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர் எனவே இந்த சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்கக் கோரியும் திமுக அரசை கண்டித்தும்,அதிமுக சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.மருத்துவர் அணி தலைவர் மைத்ரேயன் M.P தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் வட சென்னை மாவட்ட செயலாளர் சேகர்பாபு M.L.A முன்னிலை வகிக்கிறார்.இவ்வாறு ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.

.

February 16, 2010

பிறந்தநாள் விழாவில் ஆடம்பரம் வேண்டாம்.

அரிசி,சர்க்கரை,பருப்பு,வகைகள்,சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் 4 ஆண்டாக ஏறிக் கொண்டே போகின்றன.இதனால் ஏழை,நடுத்தர மக்கள் அல்லல்படுகின்றனர்.தொடரும் மின்வெட்டு,மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தொழில் உற்ப்பத்தி குறைந்து வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சிக்கும்,தொழில் வளர்ச்சிக்கும் எதிர் மறையான சூழ்நிலைபிறந்தநாள் விழாவில் ஆடம்பரம் வேண்டாம். தமிழகத்தில் நிலவுகிறது.கொசுத் தொல்லை மக்களை படாதபாடு படுத்திக் கொண்டு இருக்கிறது.இதனால் புதுப்புது நோய்களுக்கு மக்கள் ஆளாக்கப் பட்டுள்ளதோடு நிம்மதியாக தூங்க கூட முடியாத நிலை உள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் 5000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது.மின் கட்டணம் உயரப் போகிறது என்பன போன்ற செய்திகள் மக்களிடையே மேலும் பீதியை கிளப்பியுள்ளன.தமிழக மக்கள் வேதனையில் தவிக்கின்றனர்.இந்த நிலை மாற வேண்டும் மக்கள் மனது வைத்தால் மாறும் இந்தச் சூழ்நிலையில் என் பிறந்தநாளன்று ஆடம்பரமான கொண்டாட்டங்களை நடத்த வேண்டாம் என்று அதிமுகவினரை கேட்டுக் கொள்கிறேன்.பிறந்தநாளன்று என்னை சந்திப்பதற்காக வருவதை தவிர்த்து ஏழைகளின் வாட்டத்தை சிறிதளவாவது போக்கும் வகையில் அவர்களுக்கு பொருளுதவி,மருத்துவ உதவி,அன்னதானம் ரத்ததானம் போன்ற நற்காரியங்களில் அதிமுகவினர் ஏடுபட்டால் அது எனக்கு மிகுந்த மகிழையைத் தரும்.

.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites