February 19, 2010

ரயில்வே சுரங்கப்பாதை பணி தேக்கம் சென்னையில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் காகித வடிவில்தான் இருக்கின்றன என்பதற்கு மற்றுமொரு எதுத்துக்காட்டு வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு,மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்தப் புள்ளியும் கோரப்பட்டது.இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா 2007ம் ஆண்டு நடந்தது.மூன்று ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை இதனால் கணேஷ் நகர்,ஜானகிராம் நகர்,ரெட்டி காலனி,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.இதுமட்டுமல்லாமல் ரயில்வே நிர்வாகத்துடன் திமுக அரசு ஒத்துழைப்பு அளிக்காதது குறைவான நிதி ஒதுக்கீடு ஒப்பந்தக்காரர் பிரச்னை போன்ற காரணங்களால் சுரங்கப்பாதை பணி தேக்கம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர் எனவே இந்த சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்கக் கோரியும் திமுக அரசை கண்டித்தும்,அதிமுக சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.மருத்துவர் அணி தலைவர் மைத்ரேயன் M.P தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் வட சென்னை மாவட்ட செயலாளர் சேகர்பாபு M.L.A முன்னிலை வகிக்கிறார்.இவ்வாறு ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.

.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites