This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

December 25, 2009

கிறிஸ்துமஸ் வாழ்த்து 2009

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுங்கள்,பகைவனுக்கு அருளுங்கள்,தீமை செய்தவருக்கும் நன்மையே செய்யுங்கள் என்று போதித்தவர் இயேசு பெருமான்.வன்முறை வெறியாட்டத்தால் வதைபட்டுக் கொண்டிருக்கும் தமிழகம்,அவரது வழி நின்றால் வளம் பெறும்.இந்த நன்னாளில் அனைவரது வாழ்விலும் அமைதியும்,ஆனந்தமும் தவழட்டும்.செல்லம் செழிக்கட்டும்.அம்மா அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

.

December 24, 2009

ஜெயலலிதா அறிக்கை இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான்

வந்தவாசி,திருச்செந்தூர் இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால்,தேர்தல் சுதந்திரமாகவும்,நியாயமாகவும் நடைபெற வேண்டும் மக்கள் எந்த வித மிரட்டலுக்கும் ஆட்படாமல் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.ஆனால்,தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது.பொதுவாக,தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன்,மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்'என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூறுவது மரபு.ஆனால் திமுக அரசு பொற்ப்பேற்ற பிறகு,எந்தத் தேர்தலிலும் மக்களின் தீர்ப்பு உண்மையாக பிரதிபலிக்கப்படவில்லை.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாக இருந்தது.ஆனால்,தேர்தல் முடிவோ மக்களின் விருப்பத்துக்கு எதிராக இருந்தது.திருச்செந்தூர்,வந்தவாசி இடைத்தேர்தல்களின் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான்.இருப்பினும் திமுகவை எதிர்கொள்ள யாருமே இல்லை என்ற நிலைமை வரக் கூடாது என்ற எண்ணத்தில்,ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து அதிமுக போட்டியிட்டது.மக்கள் மீது நம்பிக்கை வைத்து,அதிமுக போட்டியிட்டது.மக்கள் மீது நம்பிக்கை வைத்து அதிமுக தனது ஜனநாயகக் கடமையை ஆற்றும்.இந்த இடைத்தேர்தல் வெற்றி,திமுகவுக்கு உண்மையான தோல்வியும் அல்ல.இதைக்கன்டு அதிமுக தொண்டர்கள் வருத்தப்பட்டால்,தொடர்ந்து ஜனநாயக முறையில் மக்கள் பணியாற்ற வேண்டும்.எனது வேண்டுகோளை எற்று,அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும்,அல்லும்,பகலும் அயராது உழைத்த கட்சித் தொண்டர்களுக்கும்,பிரசாரம் செய்த தோழமை கட்சித் தலைவர்களுக்கும்.தொண்டர்களுக்கும்,ஆதரவு நல்கிய அனைத்து அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.

.

December 04, 2009

வேதாரண்யம் விபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க ஜெயலலிதா கோரிக்கை,

வேதாரண்யம் அருகே தனியார் பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்ததில் ஒரு ஆசிரியை,9 குழந்தைகள் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கி 20 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்திகளை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.பள்ளி,கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.அவற்றை பள்ளி,கல்லூரி நிர்வாகங்கள் கடைபிடிக்கின்றனவா என்பதை திமுக அரசு கண்காணிக்காததும்,பெரும்பாலான சாலைகள் குண்டும்,குழியுமாக எந்த வித பராமரிப்புமினறி கிடப்பதும் தான் இது போன்ற சாலை விபத்துகள் நடப்பதற்கு முக்கிய காரணம்.விதிகளை மீறும் பள்ளி,கல்லூரி நிர்வாகத்தின் மீதும்,வாகன உரிமையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேதாரண்யத்தில் எற்பட்ட விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதற்கு தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாயும்,படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்கள்.

.

December 01, 2009

கருணாநிதி அன்று முதல் இன்று வரை

நா கூசவில்லையா ?



18.11.2009 அன்று கருணாநிதி வெளியிட்டுள்ள உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் “சகோதர இப்படி காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துக் கொண்டது மாத்திரமல்ல, முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால், நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது ?“ என்று எழுதியுள்ளார்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்

என்ற வள்ளுவன் வாக்கு கருணாநிதிக்கு மட்டும் தான் தெரியுமா என்ன ?
புலிகள் தம்முடைய பலத்தையும், மாற்றான் பலத்தையும் துல்லியமாக கணிக்கத் தெரியாதவர்களா என்ன ?

1976ல் ஒரு சிறு குழுவாக துவங்கப் பட்ட புலிகள் இயக்கம், ஒரு பெரிய வளர்ந்த நாட்டுக்கு ஈடாக கடற்படை, வான்படை, தரைப்படை என்ற பெரும் ராணுவத்தை உருவாக்கி, 30 ஆண்டுகளாக சிங்களனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர்.

புலிகள் சிங்களனின் பலத்தை சரியாகவே புரிந்து வைத்திருந்தனர்.

கருணாநிதியின் நயவஞ்சகத்தைத்தான் புலிகள் சரியாக புரிந்து கொள்ளத் தவறி விட்டனர்.
சகோதர யுத்தத்தைப் பற்றிப் பேசுகிறாரே கருணாநிதி, கருணாநிதியின் வாழ்க்கை நெடுக சகோதர யுத்தத்தின் சுவடுகள் நிறைந்திருக்கின்றனவே ?

ஏன் மறந்து விட்டார் கருணாநிதி ?




1949 செப்டம்பர் 17ல் ராபின்சன் பூங்காவில் திமுக உருவெடுத்தபோது, கருணாநிதி இல்லையே ? அன்று ஐம்பெரும் தலைவர்களாக இருந்தவர்கள் அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன், மதியழகன், சம்பத் மற்றும் என்.வி.நடராஜன் மட்டும் தானே.


மதியழகன், வி.பி.ராமன், ராஜாஜி மற்றும் அண்ணா


அன்று கருணாநிதி திமுகவிலேயே இல்லையே ! சில மாதங்கள் கழித்து, திமுக வின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்த்து விட்டுப் பிறகுதானே சேர்ந்தார்.


1956ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அறிஞர் அண்ணா, “தம்பி வா, தலைமையேற்க வா“ என்று அழைத்தது நாவலர் நெடுஞ்செழியனை அன்றோ ?



கருணாநிதியைத் தன் வாரிசாக என்றுமே கருதியதில்லையே அண்ணா.
1967ல் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராக பதவியேற்ற அறிஞர் அண்ணா 1969ல் மறைந்த பொழுது, இயல்பாக முதலமைச்சராக நெடுஞ்செழியன் அல்லவோ முதல்வராயிருக்க வேண்டும் ?

அண்ணா மறைவுக்குப் பிறகு, தற்காலிக முதலமைச்சர் பொறுப்பை 1969 பிப்ரவரி 3 அன்று ஏற்று ஏற்கனவே முதலமைச்சராக ஆகி விட்டாரே நெடுஞ்செழியன்.



எம்.ஜி.ஆரின் உதவியோடு, எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று, சதித்திட்டத்தால் 1969 பிப்ரவரி 10ல் முதல்வரான கருணாநிதியா சகோதர யுத்தம் பற்றிப் பேசுவது ?


திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து திமுக துவக்கப் பட்டதும், பொதுச் செயலாளராக பதவியேற்ற அண்ணா தலைவர் பதவியை தந்தை பெரியாருக்காக காலியா வைத்திருந்திருந்தார்.

ஆனால், முதலமைச்சர் பதவியை தட்டிப் பறித்ததற்கு கைமாறாக பொதுச் செயலாளர் பதவியை நெடுஞ்செழியனுக்கு அளித்து விட்டு, தந்தை பெரியாருக்காக காலியாக வைத்திருந்த பதவியை அபகரித்துக் கொண்டு, திமுகவின் தலைவராக பதவியேற்றுக் கொண்ட கருணாநிதியா சகோதர யுத்தம் பற்றிப் பேசுவது ?


ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தது கருணாநிதி அல்லவா ?

அத்தனை எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று தன்னை முதலமைச்சராக ஆக்கிய எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கியவர் அல்லவா கருணாநிதி ?

எம்ஜிஆர் என்ற மனிதரின் புகழும், பிரச்சார பலமும் இல்லாவிட்டால் திமுக வென்றிருக்க முடியுமா ?

அதிமுகவை துவக்கிய பிறகு எம்ஜிஆர் இறக்கும் வரை கருணாநிதியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லையே ?

அப்படிப்பட்ட எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கிய இவரா சகோதர யுத்தம் பற்றிப் பேசுவது ?




1971ல் அண்ணாமலைப் பல்கலைகழகம் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கியதற்கு மாணவர்களின் எதிர்ப்பு பலமாய் கிளம்பியது. இந்த போராட்டத்தை முன்னெடுத்த, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் உதயக்குமார், திடீரென தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தார்.

இதே கருணாநிதி தனது கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறையை விட்டு, உதயக்குமாரின் பெற்றோரை மிரட்டி, அந்தப் பிணம் தங்களது மகனின் பிணமே அல்ல என்று சொல்ல வைத்தது இந்தக் கருணாநிதி அல்லவா ?

இவரா சகோதர யுத்தம் பற்றிப் பேசுவது ?


1984ல் எம்ஜிஆர், உடல் நலம் குன்றி, அமெரிக்காவில் உள்ள ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்த போது நடந்த பொதுத் தேர்தலில், “எனக்கு வாக்களியுங்கள், எம்ஜிஆர் அமெரிக்காவிலிருந்து வந்ததும், அவரிடம் முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைக்கிறேன்“ என்று கூறிய கருணாநிதியா சகோதர யுத்தம் பற்றிப் பேசுவது ?

1975ல் நெருக்கடி நிலையை அறிவித்து, 1976 ஜனவரி 31ல் ஆட்சியை கலைத்து, சிறையில் தன் மகன் ஸ்டாலின் உட்பட கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கிய, கட்சித் தொண்டர் சிட்டிபாபு மரணத்துக்கு காரணமாக இருந்த, கருணாநிதியையும் கைது செய்து சிறையில் அடைத்த, தலைமறைவாக பல நாட்கள் சுற்ற வைத்த இந்திரா காந்தியோடு வெட்கமேயில்லாமல் கூட்டணி வைத்த கருணாநிதியா விடுதலைப் புலிகளைப் பற்றி விமர்சிப்பது ?



தன்னுடைய மகனுக்குப் போட்டியாக வளர்கிறாரே என்ற ஒரே காரணத்துக்காக, “விடுதலைப் புலிகளோடு கூட்டு சேர்ந்து என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்“ என்ற அபாண்ட குற்றச் சாட்டை வைகோ மீது சுமத்தி 1993ல் திமுக விலிருந்து வைகோ வை வெளியேற்றிய இந்த கருணாநிதியா சகோதர யுத்தத்தைப் பற்றிப் பேசுவது ?


மற்ற நிகழ்ச்சிகளை விடுங்கள். தன் குடும்பத்தில் நடந்த உட்கட்சி சகோதர யுத்தங்களை தடுத்து நிறுத்தினாரா கருணாநிதி ?




2000 செப்டம்பர் 19 அன்று, அழகிரியோடு கட்சித் தொண்டர்கள் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தலைமை அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, மதுரையில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு, 6க்கு மேற்பட்ட பேருந்துகள் கொளுத்தப் பட்டனவே. தடுத்து நிறுத்தினாரா கருணாநிதி ?



தா.கிருஷ்ணன்


கருணாநிதியின் மகன்கள் அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே நடந்த அதிகாரப் போட்டியில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.கிருஷ்ணனை கொலை செய்தது யார் ? அந்தக் கொலை வழக்கில், மொத்தம் உள்ள 88 அரசு சாட்சிகளில் 87 பேரை பிறழ் சாட்சிகளாக மாற்றி, அழகிரியை வழக்கிலிருந்து விடுவித்தது யார் ? இது சகோதர யுத்தம் இல்லையா ?

குடும்பத்துக்குள், மருமகன் வழி பேரன்கள் தன் மகனை இழித்து, கருத்துக் கணிப்பு வெளியிட்டு விட்டார்கள்



என்ற ஒரே காரணத்துக்காக தினகரன் மதுரை அலுவலகத்தில் அப்பாவி ஊழியர்கள் மூன்று பேரை கொன்று அழித்தது யார் ?




இந்தக் கொலைக்குப் பிறகு சன் டிவிக்கு திடீரென்று அழகிரி “ரவுடியாக“ காட்சியளிக்கத் தொடங்கி இரு பிரிவினருக்கும் நடந்த போட்டியில், “அரசு கேபிள் கார்ப்பரேஷன்“ என்ற பெயரில், மக்கள் வரிப்பணத்தில் திட்டம் துவக்கப் பட்டு, இன்று 150 கோடி கோடியை விழுங்கி விட்டு, அரசு கேபிள் கார்ப்பரேஷன் இருந்த இடம் தெரியாமல் இருக்கிறதே, இது சகோதர யுத்தம் இல்லையா ?




ரவுடித்தனம் செய்து, பல கொலைகளுக்கு காரணமான தனது மகன் அழகிரியைப் பற்றி, “பூச்சாண்டி பொம்மைகள்“ என்ற தலைப்பில் ஏப்ரல் மாதம் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி, என்ன கூறுகிறார் தெரியுமா ?



அழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும். "இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே'' என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது."


ஒரு கொலைகார மகனை பெற்றெடுத்து, அவன் செய்யும் படுபாதகச் செயல்களுக்கெல்லாம், ஊக்கம் கொடுத்து மக்கள் வாயில் மண்ணைப் போடுகிறாரே கருணாநிதி, இது எந்த விதத்தில் நியாயம் ?


“இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும், நடத்திய அறப்போராட்டங்களும், சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி எறிந்த நிலைகளும், ஏன் இரு முறை ஆட்சியை இழந்த சரித்திர சம்பவங்களும்” என்று தன் கடிதத்தில் பட்டியலிட்டுள்ளார் கருணாநிதி.

1976ல் முதல் முறை கருணாநிதி ஆட்சியை இழக்கையில் பதவிக்காலம் முடிய சில மாதங்களே இருந்தன என்பது குறிப்பிடத் தகுந்தது. மேலும், “விஞ்ஞான முறையில் ஊழல் புரிந்தார்“ என்று நீதிபதி சர்க்காரியா பாராட்டும் அளவுக்கு ஊழல் புரிந்ததாலேயே கருணாநிதி ஆட்சி கலைக்கப் பட்டது.

மேலும், தன் மீதான ஊழல் புகார்கள் அனைத்தையும் கைவிட்டால் தான் கூட்டணி என்ற நிபந்தனை போட்டு, வெட்கமில்லாமல் இந்திரா காந்தியோடு கூட்டணி அமைத்தவர்தான் கருணாநிதி.


இரண்டாவது முறை ஆட்சியை இழந்த போது சுப்ரமணிய சுவாமி விரித்த சதியால் ஆட்சியை இழந்தார் கருணாநிதி. இலங்கை பிரச்சினைக்காகவா ஆட்சியை இழந்தார் கருணாநிதி ?


கருணாநிதிக்கு தன் குடும்பத்தை தவிர எதைப் பற்றியும் அக்கறை காட்டாதவர் என்பது உலகிறுகுத் தெரியாதா என்ன ?


வெறும் 1.81 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் விக்ரமசிங்கே தோற்று, ராஜபக்ஷே வெற்றி பெற்றார் என்றும், 8 லட்சம் தமிழ் மக்கள் உள்ள நிலையில் விடுதலை புலிகள் தமிழ் மக்களை ஆதரித்து வாக்களிக்கச் செய்திருந்தால் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றிருப்பார் என்றும், விடுதலைப் புலிகள் பெரிய தவறை செய்து விட்டார்கள் என்றும் கூறுகிறார் கருணாநிதி.


தமிழ்நாட்டில் வசதியாக குளிரூட்டப் பட்ட அறையில் உட்கார்ந்து கொண்டு, டிவியில் மானாட மயிலாட பார்த்துக் கொண்டு,



நடிகை ஸ்ரேயாவுடன் அரை குறை ஆடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டு, பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்துக் கொண்டு, இருக்கும் கருணாநிதிக்கு இலங்கையில் உள்ள கள நிலைமைகள் எப்படிப் புரியும் ?


போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்ட காலத்தில் புலிகளின் முக்கிய தளபதிகள் எத்தனை பேர் ரணில் விக்ரமசிங்கே அரசால் நயவஞ்சகமாக சுட்டுக் கொல்லப் பட்டு இருக்கிறார்கள் தெரியுமா ?


கருணாவை 1000 புலிகளோடு பிரிந்து போக முக்கிய காரணமாக விளங்கியது யார் என்று தெரியுமா ?


ஆங்கிலத்தில் Choice between the devil and deep sea என்று சொல்வார்கள். ஆழ் கடலுக்கும், சாத்தானுக்கும் இடையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதைப் போல, ரணில் விக்ரமசிங்கேவுக்கும் ராஜபக்ஷேவுக்கும் இடையே யாரைத் தேர்ந்தெடுப்பது ?

போர் நிறுத்த நேரத்தில், தந்திரமாகவும், நயவஞ்சகமாகவும், புலித் தளபதிகளை சுட்டுக் கொன்று, இயக்கத்தை பிளவு படுத்திய ரணில் விக்ரமசிங்கேவைத் தேர்ந்தெடுப்பதா, அல்லது புதியதாக ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பதா ?


புலிகளைப் பற்றிப் பேச கருணாநிதிக்கு என்ன அருகதை இருக்கிறது ?

2009 ஜனவரி மாதமெல்லாம் இலங்கையில் கடும் குண்டு வீச்சு நடைபெற்று, அது புலிகளுக்கு எதிரான போராக அல்லாமல், அப்பாவித் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் இனப் படுகொலையாக மாறி ஈழம், பிணக்காடாக மாறியிருந்த நேரம்.


அப்போது, தை 1ஐ தமிழ்ப்புத்தாண்டு தினமாக அறிவித்ததற்கு கருணாநிதிக்கு வள்ளுவர் கோட்டத்தில் நன்றி தெரிவித்து பாராட்டுக் கூட்டம்.

அப்போது அந்த விழாவில் பேசிய கருணாநிதி, “நேற்று, இந்த விழா அரங்கத்தை பார்வையிட வந்த போது, விழா ஏற்பாடுகள், உரிய நேரத்தில் முடிந்திடுமா, விழா சிறப்பாக நடந்திடுமா என்ற ஐயம் ஏற்பட்டது. ஆனால், இந்த விழாவை பார்க்கையில் என் தம்பிகள் ஜெகதரட்சகனும், துரைமுருகனும், அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து முடித்துள்ளனர்“ என்று கூறினார்.


மேலும் பேசிய கருணாநிதி “நான் இந்த விழாவில் முழு மகிழ்ச்சியோடு இருக்கிறேனா என்று நீங்கள் புரிந்து கொள்ள வில்லை. இங்கே நாம் தமிழுக்காக, தமிழை வளர்ப்பதற்காக விழா எடுத்துக் கொண்டிருக்கிறோம். பக்கத்து நாட்டில் நம் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு, தாயகத்தில் வாழ முடியாமல் அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வருகிற காட்சியும் காண முடிகிறது. அவர்களை எப்படி காப்பாற்றப் போகிறோம். இன்னும் சிறப்பாக அவர்களை வாழ வைக்க என்ன செய்யப் போகிறோம். இந்த பிரச்சினைக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைக்க என்ன தான் செய்யப் போகிறோம்.


பாறையில் வெண்ணை உருண்டை ஓடி வர, அதனை
உருகாமல் காப்பாற்ற இரு கைகளும் இல்லாதவன் பாடுபடுவது போன்ற நிலையில் நாம் இருக்கிறோம். எனவே தான் சட்டசபையில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

இந்த சூழ்நிலையில் மத்திய அரசு என்ன செய்ய முடியும் என்பதும் நமக்கு தெரியும். இந்த பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் தேட சிலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய அரசு இதில் தனது கடமையாற்ற வேண்டும்.

விரைவில் தி.மு.க. பொதுக்குழு கூடி அடுத்த நடவடிக்கை பற்றி யோசிப்போம் என்று கூறியிருக்கிறேன். அந்த பொதுக்குழு தீர்மானம் எப்படி
இருக்கும் என்று கூடி விவாதித்தால் தான் நீங்களும், நாட்டு மக்களும்,
இலங்கையில் இனப்படுகொலை செய்பவர்களும் தெரிந்து கொள்ள முடியும்.

பிப்ரவரி 15-ந் தேதிக்குள் தி.மு.க. பொதுக்குழு கூடி தமிழ் மக்கள் வாழ்வை எப்படி நிர்ணயிப்பது, எந்த வகையில் நிர்ணயிப்பது என்று முடிவெடுத்து அறிவிப்போம். நாம் அனைவரும் சேர்ந்து தமிழ் இனத்தை காப்பாற்றுவோம் என்பது தான் ”


கொத்துக் குண்டுகளுக்கு தமிழர்கள் இரையாகும் காட்சிகள், புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும், அக்டோபர் 2008 முதல் தமிழகமெங்கும் வலம் வரத் துவங்கிய நிலையில், தனக்கு நடக்கும் பாராட்டு விழா ஏற்பாடுகள் சரியாக நடக்கின்றனவா என்று முதல் நாள் சென்று மேற்பார்வை செய்து விட்டு, மறு நாள் பாராட்டு விழா நடக்கையில் எனக்கு உண்மையில் மகிழ்ச்சி இல்லை என்று “முதலைக் கண்ணீர்“ வடிக்கும் கருணாநிதி புலிகளைப் பற்றிப் பேசலாமா ?


ராஜபக்ஷேவும், பொன்சேகாவும், புலிகளோடு களத்தின் நின்று மோதினார்கள். ஆனால் சோனியாவும், கருணாநிதியும், நிழல் யுத்தம் நடத்தி, கடைசி வரை நம்பவைத்து கழுத்தறுத்தவர்கள் அல்லவா ?

கருணாநிதி பேசலாமா புலிகளைப் பற்றி ?


தன் மகனென்றும் பாராமல், வீரச் சமரிலே தன் மகனை தியாகம் செய்த பிரபாகரன் எங்கே,

பதவிக்காக சோனியா காலில் விழுந்து ஒரு ரவுடி மகனுக்கு மந்திரி பதவி பெற்றுத் தரும் கருணாநிதி எங்கே ?




பல குடும்பங்களை,. இனத்துக்காக போரில் தியாகம் செய்த புலிகள் இயக்கம் எங்கே,

தன் குடும்பத்துக்காக சுயமரியாதையை இழந்து, பதவிக்காக பிச்சை கேட்டு, தன்னை விட வயதும் அனுபவமும் குறைந்த ஒரு பெண்மணியின் காலில் தன்மானத்தை அடகு வைக்கும் கருணாநிதி எங்கே ?


மகன்களையும், மகள்களையும், சகோதர சகோதரிகளையும், கணவர்களையும், மனைவிகளையும் யுத்தத்தில் தியாகம் செய்து, வீரப் போர் புரிந்த புலிகள் இயக்கம் எங்கே,

ஊரை அடித்து உலையில் போட்டு, ஊரான் மனைவி தாலியை அறுத்து, பல ஆயிரம் கோடிகளை குவித்து வைத்துள்ள கருணாநிதி எங்கே ?


புலிகளின் பெயரை உச்சரிக்கவே கருணாநிதிக்கு நா கூச வேண்டும். இதில் புலிகளை விமர்சனம் செய்யலாமா ?



நாட்டில் அவ மதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்பங் கொண்டே! கிளியே !
சிறுமை யடைவா ரடீ !

மகாகவி பாரதி


http://www.savukku.net/2009/12/blog-post.html நன்றி சவுக்கு...


திருச்செந்தூர் தேர்தல் முடிவு திருப்பு முனையாக அமையும்....



திருச்செந்தூர் தேர்தல் முடிவு திருப்பு முனையாக அமையும்.....வேட்புமனு தாக்கல் செய்தபிறகு அதிமுக வேட்பாளர் அம்மன் T.நாராயணன் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா ஜெயலலிதா அவர்கள் ஆசியோடு 40 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.திருச்செநதூர் பகுதியில் அடிப்படை வசதிகள் பெற பாடுபடுவேன்.அதிமுக தேர்தல் பொறுப்பாளர் திரு.செங்கோட்டையன் அவர்கள் அதிமுக பொதுசெயலாளர் ஆதரவோடு வேட்புமனுதாக்கல் செய்துள்ளோம்,அம்மன் T.நாராயணன் அம்மா ஜெ வுக்கு விசுவாசமிக்கவர் இந்த தேர்தல் முடிவு திருப்புமுனையாக அமையும் என அவர் கூறினார்.

November 30, 2009

அரசின் ரகசியங்களை யாரும் வெளியிடலாமா?ஜெயலலிதா அவர்கள் கேள்வி?

அம்மா அவர்கள் 29.11.2009 அன்று வெளியிட்ட அறிக்கை:
லிபரான் கமிஷன் அறிக்கை கசிந்ததற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினால் 'சிதம்பரம் மீது சீற்றம் ஏன்?என்று முதல்வர் கருணாநிதி என்னை கேட்டுள்ளார்.1992 ல் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு குழு கூட்டத்தில் பாபர் மசூதி அப்படியே இருக்க வேண்டும் இந்த நாட்டு மக்கள் நிம்மதியாக அமைதியுடன் வாழ வழி வகுக்க வேண்டும் என்று நான் தெள்ள தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.இதை வேண்டுமென்றெ மறைத்து அவர் அறிக்கை விட்டுள்ளார்.லிபரான் அறிக்கை கசிந்ததற்கு காரணம்,சிதம்பரம் என்பதால்தான் அவர் வெளியேற வேண்டும் அல்லது வெளியெற்றப்பட வேண்டும் என்று நான் தெரிவித்தேன்.ஆனால் ஒரு சம்பவத்திற்காக விசாரணை ஆணையம் நியமிக்கப்படுவதும்,அது அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்வதும் பொதுவான நடைமுறைதான் என்றும் அதை அரசு வெளியிடும் முன் எதிர்க்கட்சியினரால் வெளியிடப்படுவதும் உண்டு என்றும் அந்த வகையில் பால் விசாரனை ஆணையத்தின் அறிக்கையை முன் கூட்டியே தான் வெளியிட்டு விட்டதாகவும் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.அப்படி யென்றால் தனக்கு அநத அறிக்கை எப்படி கிடைத்தது என்ற ரகசியத்தை அரசிடம் தெரிவித்து அதற்க்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்போது அவர் வலியுறுத்தியிருக்க வேண்டும் இதற்கு மாறாக நீதிபதி பால் அறிக்கை எவ்வாறு வெளியானது அதற்கு யாரை பழி வாங்குவது என்பதில் நேரத்தை செலவிட வேண்டாம் என்று பேரவையில் பேசியதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார் அப்படி பார்த்தால் அரசு ரகசியங்களை யார் வேண்டுமானாலும் முன் கூட்டியே வெளியிடலாமா?

November 28, 2009

பக்ரீத் வாழ்த்துக்கள் அம்மா ஜெயலலிதா


இறைவனுக்கு இணையாக எதுவும் இல்லை என்ற பற்றை உணர்த்தும் நாள்.பகிர்ந்துண்ணும் பழக்கத்தை போதிக்கும் நாள்.தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் நாள் பக்ரீத் நாள்.தன்னலத்துக்காக பிறரை பலி கொடுக்கும் இந்த உலகில் தான் பெற்ற ஒரே மகனையும் தியாகம் செய்யத் துணிந்த இறைத்தூதர் இப்ராகிமின் அர்ப்பணிப்பை,தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்ந்து,அன்பு சகோதரத்துவம்,ஒற்றுமை ஆகியவற்றை வளர்த்து நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

.

November 27, 2009

பாபர் மசூதி இடிப்பு சிதம்பரம் ?????


Swine Flu பொது செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன், 17 ஆண்டுக்கு பிறகு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இன்றைய சூழ்நிலையில், கமிஷனின் முடிவுகள் படிக்க மட்டுமே பயன்படும். மதத்தில் அரசியல் புகுத்தப்பட்டதால் பிரச்னை ஏற்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பதும் குறிப்பிடவில்லை. பல கோடி ரூபாய் செலவழித்து, 17 ஆண்டுக்கு பிறகு பெறப்பட்ட அறிக்கை, வெறும் சூட்டையும், தூசியையும்தான் கிளப்பி விட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு, அறிக்கையின் சில பகுதிகள் எப்படி பத்திரிகைகளுக்கு கசிந்தன. இந்த பிரச்னையை, எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் அவசர, அவசரமாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கை கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை ராஜினாமா செய்ய கோருவது நியாயம். ஆனால், ‘அறிக்கை கசிந்தது துரதிருஷ்டவசமானது. உள்துறை அமைச்சகத்துக்கு வெளியில்தான் அது ஏற்பட்டிருக்கிறது’ என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்செக்ஸ் குறியீடு அபரிதமாக உயர்ந்தபோது தன் பொருளாதார கொள்கைதான் காரணம் என்று நிதி அமைச்சராக இருந்தபோது சொன்னார். வீழ்ச்சி ஏற்பட்டபோது சந்தை மீது பழி போட்டார். இதே முறையைதான், இப்போதும் சிதம்பரம் கடைபிடித்திருக்கிறார். கரும்பு விலை அவசர சட்டம், மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை சட்டம், முல்லை பெரியாறு பிரச்னை என முக்கியமான மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் லிபரான் அறிக்கை பின்னுக்கு தள்ளிவிட்டது. மத்திய அரசு மட்டும்தான் இந்த அறிக்கை கசிவின் மூலம் பயன் அடைந்துள்ளது. இது சூழ்ச்சியுடன் திட்டமிட்டு வெளியிடப்பட்ட கசிவு.

அறிக்கையின் ஒரே ஒரு நகல் மத்திய உள்துறை அமைச்சரிடம் மட்டும்தான் இருந்தது. எனவே, அறிக்கை கசிவுக்கு சிதம்பரம்தான் முழு பொறுப்பு என்பது வெளிப்படை. அவர் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
நன்றி தினகரன்

இடைத்தேர்தல் அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்.

அம்மா அறிக்கை: திருச்செந்தூர்,வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் ,அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள குழு அமைக்கப் பட்டுள்ளது.திருச்செந்தூர் தொகுதி தேர்தல் பணிக் குழு தலைவராக திரு.செங்கோட்டையன் M.L.A , வந்தவாசிக்கு திரு.தம்பிதுரை M.P ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்,கட்சி தொண்டர்கள் தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.


.

அதிமுகவுக்கு மதிமுக ஆதரவு:திரு. வைகோ அவர்கள்


மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று [26.11.2009]பிற்பகல் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா அவர்களை போயஸ் கார்டனில் சந்தித்தார் அதன்பின் நிருபர்களிடம் திருச்செந்தூர்,வந்தவாசி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக மதிமுக தீவிரமாக பணியாற்றும்.டிசம்பர் 3ம் தேதி திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறேன்.வந்தவாசி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து 5ம் தேதி பிரச்சாரம் செய்கிறேன்.8ம் தேதி முதல் 10ம் தேதி வரை திருச்செந்தூரிலும்,14ம் தேதி முதல் 16ம் தேதி வரை வந்தவாசியிலும் பிரச்சாரம் செய்கிறேன்.இவ்வாறு கூறினார்.இந்திய குடியரசு கட்சி தலைவர் திரு.செ.கு.தழிழரசன்,அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் திரு.சேதுராமன்,பார்வர்ட் பிளாக் கதிரவன் ஆகியோர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

.

November 26, 2009

தா.பாண்டியன் அ.தி.மு.க க்கு ஆதரவு

வந்தவாசி,திருச்செந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும் என்று தா.பாண்டியன் கூறினார்.இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அவர்கள்,மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு,நிர்வாகிகள் ஏ.எம்.கோபு,மகேந்திரன் ஆகியோர் நேற்று[26.11.2009]மாலை 3 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களை போயஸ் கார்டனில் சந்தித்தனர்.


.

November 24, 2009

மத்திய அரசின் மீனவர் சட்டத்தை,... அதிமுக எதிர்ப்பு...

அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அவர்கள் 23.11.2009 அன்று வெளியிட்ட அறிக்கை:தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கடல்மீன் தொழில் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்ட மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.படகுகளுக்கு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்,மீன் பிடிக்க உரிமம் பெற வேண்டும்,12கடல் மைல் தாண்டி மீன் பிடித்தால் 9 லட்சம் ரூபாய் அபராதம் 3 மாத சிறை என்று மீனவர்களை துன்புறுத்தக் கூடிய எல்லா அம்சங்களும் மசோதாவில் இடம் பெற்றுள்லன்.அதே சமயம்,வெளிநாட்டு மீன்பிடி படகுகள்,எந்த தடையுமின்றி இந்திய எல்லைக்குள் வர இந்த சட்டம் வழி வகுக்கிறது என்றும்,வெளிநாட்டினர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மீன் தேவையை கருத்தில் கொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்க இச் சட்டம் கொணடு வரப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.உடனடியாக இந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற கருநாநிதி வலியுறுத்த வேண்டும்.கரும்புக்கான ஆதார விலை குறித்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்த போது அதை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்தது அதிமுக தான் நாடாளு மன்றத்திலும் அதிமுக உறுப்பினர்கள் எதிர்த்தனர்.அதனால் மத்திய அரசு அதில் சில திருத்தங்களை கொண்டுவரவுள்ளது.அதேபோல் கடல் மீன் தொழில் மசோதாவையும் அதிமுக கடுமையாக எதிர்க்கும்.அதை அறிமுக நிலையிலேயே திரும்ப பெற அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடிப்பார்கள் இவ்வாறு ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.


.

November 23, 2009

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்


திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வருகிற டிசம்பர் 19ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் அணையம் அறிவித்து.

இதையடுத்து அ.தி.மு.க.இந்த இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். இந்நிலையில் இன்று காலை அ.தி.மு.க.சார்பில் திருச்செந்தூர்,வந்தவாசிதொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிவிப்பில் திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் அம்மன் நாராயணனும், வந்தவாசி தொகுதியில் முனுசாமியும் போட்டியிடுவார்கள் என்று அறிவித்துள்ளார்


.

இடைத்தேர்தல் அதிமுக.வினரிடம் அம்மா ஜெயலலிதா நேர்காணல்.

திருச்செந்தூர்,வந்தவாசி சட்டபேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் அம்மா ஜெயலலிதா அவர்கள் நேற்று[22.11.09]நேர்காணல் நடத்தினார்.திருச்செந்தூர்,வந்தவாசி சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 19 ம் தேதி நடக்கிறது இந்த முறை இடைத்தேர்தலில் அதிமுக கண்டிப்பாக போட்டியிடும் என்று அம்மா ஜெயலலிதா கடந்த 20ம் தேதி அறிவித்தார்.இதையடுத்து 2 தொகுதியில் இருந்தும் தலா 3 பேரை தேர்ந்தெடுத்து உடனடியாக சென்னை வரும்மாறு நேற்று முன் தினம் அழைப்பு விடுக்கப்பட்டது.திருச்செந்தூர் தொகுதியை சேர்ந்த பள்ளதூர் முருகேசன்[முன்னாள் ஒன்றிய செயலாளர்]அம்மன் நாராயணன்[உடண்குடி ஒன்றிய செயலாளர்]தாமோதரன்[2004 ல் திருச்செந்தூர் நாடாளு மன்ற தேர்தலிலும் ,1996 ல் திருச்செந்தூர் சட்டப்பேரவை தேர்தலிலும் தோற்றவர்]வந்தவாசி தொகுதியில் முனுசாமி[நகர M.G.R மன்ற பொருளாளர்]குணசீலன்[அனங்காவூர் ஒன்றிய செயலாளர்] சக்கரபாணி[மாவட்ட இளைஞர் அணி செயலாளர்] ஆகியோர் வந்தனர்.இவர்களை தனி தனியாக அழைத்து ஜெயலலிதா அவர்கள் நேர்காணல் நடத்தினார் வந்தவாசி தொகுதி தனித் தொகுதி என்பதால் அந்த தொகுதியை சேர்ந்த 3 பேரிடம்,ஜாதி சான்றிதழ் கொண்டு வருமாறும் உத்தரவிட்டார்.

November 21, 2009

கருநா நிதியின் துரோகத்தின் மொழி

க( கொ)லைஞரைப்பற்றி நீங்கள் தெரிந்துகொண்டது இவ்வளவுதானா?
அடடா !
அவர் சகோதரயுத்தம் என்று மீண்டும் மீண்டும் பிதற்றுகிறார் என்றால் , அதன் நேரடியான பொருளை நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது !
அவர் ஒரு சொல்லைச்சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்குமல்லவா?
அந்தவகையில்,இவர் கருதுவது :
தமக்குச்சார்பான சகோதரயுத்தம் நடைபெறவில்லையே என்பதுதான் அவரது ஆதங்கம் !
இதை என்றுதான் உண்மையாகப்புரிந்துகொள்கிறோமோ, அன்றுதான் தமிழனுக்கே விடிவுவரும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. நன்றி.... S.தளபதி சிவம் நாதன் அவர்கள்.


.

November 20, 2009

புதுச்சேரியில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்


அரியூர் சர்க்கரை ஆலை பிரச்சனை புதுச்சேரியில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் திரு அம்மா ஜெயலலிதா அவர்கள் அறிக்கை.புதுச்சேரியில் நஷ்டத்தில் இயங்கிய அரியூர் தனியார் சர்க்கரை ஆலையை இன்னோரு தனியார் நிறுவனம் வாங்கிய போது,ஆலையின் வங்கி கடன் போக,மீத முள்ள தொகை தொழிளாளர்களுக்கும் கரும்பு விவசாயிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஒராண்டுக்கு மேலாகியும் தொழிளாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை புதிய நிவாகம் ஆலையின் 375 தொழிளாளர்களில் 200 க்கும் மேற்ப்பட்டவர்களை நீக்கியதோடு ஆலையை இயக்காமல் வைத்திருக்கின்றனர்.இதனால் இந்த ஆலைக்கு வழங்க வேண்டிய கரும்பை அண்டை மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு தரவேண்டுடிய கட்டாயத்துக்கு கரும்பு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மேலும்,லிங்காரெட்டி பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உரிய கரும்பை தனியார் நிறுவனத்துக்கு அனுப்ப புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு அனுமதித்துள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே,புதுச்சேரி அரசு அரியூர் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும்,கரும்புக்கு ரூ.2000 வழங்க வலியுறுத்தியும் 20 ம் தேதி காலை 10 மணிக்கு அரியூர் சர்க்கரை ஆலை முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திரளான் விவசாயிகள்,பொது மக்கள் திரன்டனர் இதற்க்கு விவசாய பிரிவு செயளாலர் துரை கோவிந்தராஜன் தலைமை வகித்தார்கள்.


.

November 18, 2009

அதிமுக உள்கட்சி தேர்தல் அம்மா ஜெயலலிதா இன்று அவசர ஆலோசனை.


அதிமுக உள்கட்சி தேர்தல் அம்மா ஜெயலலிதா இன்று அவசர ஆலோசனை.அதிமுக சட்ட விதிகளின் படி உள் கட்சி தேர்தல்,ஜந்து ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும்.ஏற்கனவே 2003 ம் ஆண்டு அதிமுக உள்கட்சி தேர்தல் நடந்தது.இதைத் தொடர்ந்து உள்கட்சி தேர்தல் அறிவிப்பை ஜெயலலிதா அவர்கள் கடந்த 12ம் தேதி வெளியிட்டார்.முதல்கட்டமாக,நவம்பர் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரையும்,2ம் கட்டமாக 27 முதல் 30ம் தேதி வரையும் கிளை நிர்வாகிகள்,வார்டு,வட்டச்செயலாளர்கள் பொருப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது.3 வது கட்டமாக டிசம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஒன்றிய,நகர,பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகள் தேர்தலும்,4வது கட்டமாக டிசம்பர் 7 முதல் 11ம் தேதி வரை மாவட்ட செயலாளர்கள்,பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலும் நடக்கிறது.தேர்தலை நடத்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களாக கட்சி மூத்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களிடம் தேர்தல் பணி குறித்து இன்று காலை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா அவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

November 16, 2009

மு‌ல்லை‌ப் பெ‌‌ரியாறு ‌பிர‌ச்சனை‌யி‌ல் கருணா‌நி‌தி ‌நீ‌லி‌க்க‌ண்ண‌ீ‌ர் வடி‌க்‌கிறா‌ர்: ஜெயல‌லிதா கு‌ற்ற‌ச்சா‌ற்று செ‌ன்னை, திங்கள், 16 நவம்பர் 2009


முல்லைபபெரியாறஅணபிரச்சனையிலமுதலமைச்சரகருணாநிதி நீலிக்கண்ணீரவடித்ததனததவறுகளமறைக்கபபார்ப்பதாஅ.இ.அ.ி.ு.பொதுசசெயலரஜெயலலிதகுற்றமா‌ற்‌றியுள்ளார். இந்பிரச்சனையிலதற்போதைநிலைக்ககருணாநிதியினதிறமையின்மைதானகாரணமஎன்றஅவரகண்டனமதெரிவித்துள்ளார்.

இததொடர்பாஅவரவெளியிட்டுள்ள அறிக்கையில், ''தன்னலத்திற்காதலைநகரமடெல்லிக்கதன்னுடைபரிவாரங்களுடனதலைதெறிக்ஓடுமகருணாநிதி, தமிழரநலமஎன்றவுடனயாரிடமமுறையிடுவதஎன்றதெரியவில்லஎன்றபுலம்பியிருப்பதிலவியப்பஏதுமில்லை. இதுதானஅவருடைசுயரூபம்.

நானதமிழகத்தினமுதலமைச்சராஇருந்தபோது, முல்லைபபெரியாறஅணையினநீர்மட்டத்தஉயர்த்வேண்டியதனஅவசியத்தவலியுறுத்தி தமிழ்நாடஅரசினசார்பிலஎடுத்தவைக்கப்பட்வாதங்களஏற்றுககொண்டஅணையினநீர்மட்டத்ததற்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரஉயர்த்திககொள்ளலாமஎன்று 27.2.2006 அன்றஉச்ச நீ‌திமன்றமதீர்ப்பளித்தது.

அதாவதகோடகாதுவக்கத்திலஇதபோன்உத்தரவஉச்ச நீதிமன்றமபிறப்பித்தது. எனவஉச்ச நீதிமன்ஆணைப்படி உடனடியாஅணையினநீர்மட்டத்தஉயர்த்ஏதுவாஅணையினமதகுகளஇறக்கி விடுவதற்காவாய்ப்பஅப்போதஇல்லாமலபோயிற்று. மழபெய்தஅதனவிளைவாமுல்லைபபெரியாறஅணையிலதண்ணீரபெருக்கெடுத்தஓடும்போதகருணாநிதி தலைமையிலாி.ு.அரசுதானஆட்சிபபொறுப்பிலஇருந்தது. எனவஉச்ச நீதிமன்ஆணையினபடி அணையினமதகுகளஇறக்கி நீர்மட்டத்தை 142 அடியாஉயர்த்துமபொறுப்புமி.ு.அரசினகையில்தானஇருந்தது.

ஆனாலகருணாநிதி அவருக்கஉரிகாரணங்களாதன்னலம், குடும்வருமானமஆகியவற்றகருத்திலகொண்டஅணையினநீர்மட்டத்தஉயர்த்துவதற்காஆணைகளபிறப்பிக்கவில்லை. இதற்குபபதிலாஉச்ச நீதிமன்ஆணையமுற்றிலுமபுறக்கணிக்குமவகையில், கேரஅரசஅவசஅவசரமாஒரசட்டத்தஇயற்றி விட்டதாதெரிவித்ததமிழகத்திற்கதுரோகமஇழைத்தாரகருணாநிதி.

கேரஅரசஇயற்றிசட்டத்தகட்டாயமாபின்பற்வேண்டிநிர்ப்பந்தமி.ு.அரசினமுதலமைச்சரகருணாநிதிக்கஎந்காலககட்டத்திலிருந்தஏற்பட்டது? கேரஅரசாலசட்டவிரோதமாஇயற்றப்பட்சட்டமஉச்ச நீதிமன்ஆணையதூக்கி எறியுமவிதத்திலஅல்லதமீறுமவிதத்திலஅமைந்துள்ளதஎன்றஎப்போதகருணாநிதி நினைக்ஆரம்பித்தார்?

இந்தியநாட்டினமிஉயரிஅமைப்பாஉச்ச நீதிமன்றத்தினஆணையகையிலவைத்துககொண்டகேரமாநிலத்தினஉள்ளூரசட்டத்திற்கஏனகருணாநிதி மதிப்பளித்தார்? ஒன்றல்ல, மூன்றபருமழைகளினமூலமமுல்லைபபெரியாறஅணைக்கதண்ணீரவந்தது. இருப்பினுமஅணையினநீர்மட்டத்தை 142 அடி வரஉயர்த்துமஅளவிற்கஅணையினகதவுகளஇறக்தமிழஅரசினஅதிகாரிகளுக்ககருணாநிதி உத்தரவபிறப்பிக்கவில்லை! இதயாருடைகுற்றம்? கருணாநிதியினகுற்றமா? கேரஅரசினகுற்றமா? உச்ச நீதிமன்றத்தினகுற்றமா?

முல்லைபபெரியாறவழக்கஅரசியலசாசஅமர்விற்கஅனுப்பியதனமூலமமிகபபெரிஅநீதியஉச்ச நீதிமன்றமதமிழகத்திற்கஇழைத்துள்ளதஎன்றசலிப்பூட்டுமதனது 5 பக்அறிக்கையிலதற்போதகருணாநிதி புலம்பியிருக்கிறார்.

முல்லைபபெரியாறஅணையினநீர்மட்டத்தை 142 அடி வரஉயர்த்திககொள்ள 2006 ஆமஆண்டஅனுமதி அளித்தீர்ப்பினமீதஉச்ச நீதிமன்றத்திற்கநம்பிக்கஇல்லஎன்றஉச்ச நீதிமன்றத்தினமீதபழி சுமத்கருணாநிதி முயல்கிறார். வழக்கமபோல், கருணாநிதி முதலைககண்ணீரவடிக்கிறார். கருணாநிதியினதிறமையின்மகாரணமாதமிழ்நாட்டினஉரிமைகளபறிபோயவிட்டன.

முல்லைபபெரியாறபிரச்சனையஅரசியலசாசஅமர்விற்கஅனுப்திட்டமிட்டஇருப்பதாஉச்ச நீதிமன்றமதெரிவித்தபோது, குறைந்பட்சமதமிழகத்தினஎதிர்ப்பையாவதஉரத்குரலிலஉச்ச நீதிமன்றத்திலபதிவசெய்திருகவேண்டும். இதைககூி.ு.அரசசெய்யவில்லை. முல்லைபபெரியாறபிரச்சனஅரசியலசாசஅமர்விற்கஅனுப்பப்படுமஎன்றஉச்ச நீதிமன்றமதெரிவித்தபோது, தமிழகத்தினசார்பிலஆஜராமூத்வழக்கறிஞரஇதற்கஎதிர்ப்பதெரிவிக்கவில்லஎனககுறிப்பிட்டஅனைத்தபத்திரிகைகளுமசெய்தி வெளியிட்டன.

தற்போதஇந்தபபிரச்சனையவிசாரிக்க 5 நீதிபதிகளைககொண்அரசியலசாசஅமர்வஅமைக்கப்பவேண்டும். உச்நீதிமன்றத்திலஇதுவரகடைபிடிக்கப்பட்டவருகின்நடைமுறையவைத்துபபார்த்தாலஓராண்டிற்கமூன்றஅல்லதநான்கமுறைக்கமேலஅரசியலசாசஅமர்வகூடியதகிடையாது. எனவகருணாநிதியினசுயநலத்தாலமுல்லைபபெரியாறபிரச்சனகிடப்பிலபோடப்படுமசூழ்நிலைக்கதள்ளப்பட்டவிட்டது. இந்தபபெருமகருணாநிதியமட்டுமசாரும். தற்போதநீலிககண்ணீரவடிப்பதனமூலமதானசெய்தவறகருணாநிதி மூடி மறைக்முடியாது'' எ‌ன்று ஜெயல‌லிதா கூறியுள்ளார்.

‌‌நீல‌‌கி‌ரி‌யில் அ.இ.அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்


நீலகிரி ‌மாவட்டத்தில் ‌நிவாரணபபணிகளதுரிதப்படுத்வலியுறுத்தியும், உயிரிழந்தவர்களினகுடும்பத்தினருக்கவழங்கப்படுமஉதவிததொகையஅதிகரித்தவழங்வலியுறுத்தியும் அ.இ.அ.ி.ு.க. சார்பில் ‌நீ‌ல‌கி‌ரி‌யி‌லஇ‌ன்றக‌ண்டஆர்ப்பாட்டமநடைபெற்றது.

நீல‌கி‌ரி மாவ‌ட்ஆ‌ட்‌சிய‌ரஅலுவலக‌ம் முன்பநடைபெ‌ற்இ‌ந்ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கமு‌ன்னா‌ளஅமை‌ச்ச‌ரபொள்ளாச்சி ஜெயராமனதலைமை தா‌ங்‌‌கினா‌ர்.

அ‌ப்போதபே‌சிஅவ‌ர், ‌நிவாரமுகா‌ம்க‌ளி‌லஉள்ளவர்களுக்கநிவாரண‌உத‌வி வழங்குவதிலத‌மிழஅரசபாரபட்சமகாட்டுகிறதஎன்றகுற்றமா‌ற்‌றினார்.திங்கள், 16 நவம்பர் 2009

November 15, 2009

இந்தியாவில் எல்லா தொகுதியிலும் இடைத்தேர்தல்

இந்தியாவில் எல்லா தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்தவேண்டும். அதில் கருணானிதிகட்சி தான் பொட்டியிட வேண்டும்! அண்ணன் அழகிரி தான் முன்னின்று வேலை செய்யவேண்டும்!

சாக்கடை சுருளினதனும் கருணாநிதியும் ஒன்னு எப்படி?

சாக்கடை சுருளினதனும் கருணாநிதியும் ஒன்னு எப்படி?
ஒன்றுக்குமேற்பட்ட பெண்களுடன் தொடர்பு, அதிகபடியான சுயநலம், சாகும் வரையிலும் பதவி,பண பித்து , அதற்காக எதையும் செய்யல் , ஒரு பிரச்சனைக்காக இன்னொரு பிரச்சனையெய் ஏற்படுத்துதல், பொய், புரட்டு, பித்தலாட்டம், செத்து போனவனை சாட்சியாக க்குப்பிடுதல் , அடுத்தவனை ஒளித்துக்கத்டியாவது வாழ்தல் ....சென்னையில் என் முகவரியை தொலைக்க செய்துவிட்டான் சுருளி .....
கருணாநிதி கும்பலுக்கா உங்கள் வாக்கு?

ஆண்டவன் தான் இந்த பாழாய் போன மக்களை காப்பற்றனும்!

எங்களுக்கு ஒரு ரூபாய் அரிசியும் , டிவி யும் போதும் . எவன் எத்தனை லட்சம் கோடி கொள்ளை அடித்தாலும் பரவாயில்லை என்று மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். பண பலம், உருட்டல் , மிரட்டல், அரசு அதிகாரிகளின் நியாயமற்ற தன்மை போதும் ஆண்டவன் தான் இந்த பாழாய் போன மக்களை காப்பற்றனும்!

மூன்று மணிநேர திரையரங்கு சுகமும் அறுபத்துயொருவருட கால போராட்ட வலிகளும்

மூன்று மணிநேர திரையரங்கு சுகமும் அறுபத்துயொருவருட கால போராட்ட வலிகளும்







மூன்று மணிநேர திரையரங்கு சுகமும் அறுபத்துயொருவருட கால போராட்ட வலிகளும்

இந்திய தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சி நிறுவனங்களும், அவர்களின் ஏனைய நிறுவனங்களும் தமது பொருளாதார வளர்ச்சிகளுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஈழத்தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்ற மடல் ஒன்றை எனது நண்பர் ஒருவர் கடந்த வாரம் எனக்கு அனுப்பியிருந்தார்.

கருணாநிதியின் குடும்ப சொத்தாக விளங்கும் தொலைக்காட்சி நிறுவனங்களில் சன் தொலைக்காட்சி நிறுவனம், சன் திரைப்பட நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் என்பன முக்கியமானவை. இந்த தொலைக்காட்சிகள் ஈழத்தமிழ் மக்களின் அண்மைய பேரவலங்களை முற்றாகவே புறக்கணித்திருந்தன.

ஒரு இனம் அழிவின் விழிம்பில் அவலக்குரல் எழும்பிய போதும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. தனது மூன்று மணிநேர உண்ணாவிரதத்தின் மூலம் வன்னியில் போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற கருணாநிதியின் போலியான பிரச்சாரங்களை மிகைப்படுத்திய இந்த ஊடகங்கள் இறுதிக்கட்ட தாக்குதல்களின் மோசமான விளைவுகளை தமிழகத்தில் இருட்டடிப்பு செய்திருந்தன.

மேலும் இந்த நிறுவனங்கள் சிறீலங்கா அரசின் தாக்குதல்களிலும், குண்டு வ நன்றி
Thaiyagan S

திருப்பூர் நித்தியின் அன்பு வேண்டுகோள்


http://nellaicityaiadmk.blogspot.com/
எங்கள் உயிர் நாடியே! எங்கள் உயிர் சுவாசமே!

"நீரின்றி அமையாது உலகு!
அதுபோல் நீர் இன்றி அமையாது எங்கள் வாழ்வு!!

கட்டளையிடுங்கள், எங்கள் அன்னையே!

"சூரியனை பிடித்து, உங்கள் காலணியாக்க வேண்டுமா! அல்லது இமயமலையை இல்லாமல் செய்ய வேண்டுமா! அணுவை அண்டம்மாக்க வேண்டுமா! அல்லது அண்டத்தை அணுவாக்க வேண்டுமா! கடல் நீரை காற்றாக வேண்டுமா! அல்லது காற்றை கடல் நீர்ராக்க வேண்டுமா! நீங்கள் சொல்லுங்கள் எங்கள் இதயதெய்வமே!
நீங்கள் சொல்லி முடிப்பதற்குள், நாங்கள் செய்து முடித்து இருப்போம்! இப்படிக்கு உங்கள் நலம் விரும்பும் உங்கள் பக்த கோடிகள்!!

ஒரே கடவுள் இதயதெய்வம் அம்மா! ஒரே கோவில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்!"
நன்றி என் அன்பு தம்பி நித்தி திருப்பூர் அதிமுக அம்மாவின் தீவிர பக்த்தன்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites