February 20, 2011

மேட்டுப்பாளையத்தில் நிலவும் அவல நிலைக்குக் காரணமான, நூல் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்க

சென்னை, பிப். 20
மேட்டுப்பாளையம் நகராட்சியில் நிலவும் அவல நிலைக்குக் காரணமான, நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தாத மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து, கோவை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், இன்று (20.2.2011 ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில், மேட்டுப்பாளையம் நகர பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிவிப்பு வருமாறு:
தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 113/2011
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் முக்கிய அறிவிப்பு மேட்டுப்பாளையம் நகராட்சியில் நிலவும் அவல நிலைக்குக் காரணமான, நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தாத மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து, கோவை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 20.2.2011  ஞாயிற்றுக்கிழமை மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராத அலங்கோல ஆட்சியாக மைனாரிட்டி தி.மு.க. அரசு விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
மேட்டுப்பாளையம் நகராட்சியை எடுத்துக் கொண்டால், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர்.
எனது ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தினை மைனாரிட்டி தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளதன் காரணமாக கழிவு நீர் அனைத்தும் பவானி ஆற்றில் கலந்து நதிநீர் மாசுபட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் நகராட்சியே ஆக்கிரமிப்பு செய்துள்ளதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், மின் மயானப் பணிகளை நகராட்சி நிர்வாகம் தன்வசம் எடுத்துக் கொண்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் அந்தப் பணிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்றும், நகரின் மையப் பகுதியில் சிதிலமடைந்துள்ள அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயிலை புதுப்பிக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், நகரின் பல்வேறு இடங்களில் பொதுக்
கழிப்பிடம் கட்டும் பணி முடங்கிக் கிடப்பதாகவும், நகராட்சிக்கு உட்பட்ட 11 வார்டுகளில் துப்புறவுப் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம் முறையாக செயல்படாததன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மைனாரிட்டி தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாகவும், தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசின் ஏற்றுமதி கொள்கை காரணமாகவும், பருத்தி மற்றும் பட்டு நூலின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவதால், கைத்தறி நெசவுத் தொழிலை நம்பியுள்ள சிறுமுகை, சாமிசெட்டிப்பாளையம் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், காட்டு யானைகளால் பயிர்ச் சேதம் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் அரசாக மைனாரிட்டி தி.மு.க. அரசு விளங்குகிறது. எனவே, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் நிலவும் அவல நிலைக்குக் காரணமான, நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தாத மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கோவை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், 20.2.2011 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணி அளவில், மேட்டுப்பாளையம் நகர பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் டாக்டர் பி.எச். பாண்டியன் அவர்கள் தலைமையிலும், கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. தா. மலரவன், எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. செ.ம.வேலுசாமி, எம்.எல்.ஏ., மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் திரு.ஓ.கே. சின்னராஜ், எம்.எல்.ஏ., மற்றும் அவினாசி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆர். பிரேமா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோவை மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த
நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டுஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.



பொதுச்செயலாளர்
அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம்.
நாள்: 19.2.2011

சென்னை14.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites