February 21, 2011

டைம்ஸ் நவ்’ டி.வி.க்கு புரட்சித்தலைவி அம்மா அளித்த பேட்டி இந்திய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது


சென்னை, நவ. 17-
கடந்த இரண்டரை ஆண்டுகளாக பரபரப்பை ஏற்படுத்திவரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சினையில் முக்கியத் திருப்பம் ஏற்பட, டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அளித்த பேட்டி காரணமாக அமைந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விஷயத்தில் தி.மு.க.வின் நிர்ப்பந்தத்தையும் மீறி, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இந்த பரபரப்பு பேட்டி காரணமாக இருந்தது என்றும், அந்த நாளிதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் உரிய நடைமுறையை பின்பற்றாமல் முந்துபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், விசித்திரமான முறையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மேற்கொண்ட நடவடிக்கையால் நாட்டிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

கடந்த இரண்டரை ஆண்டுகாலமாகவே இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் இந்த பிரச்சினை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வந்தாலும், இதன் உச்சக்கட்டமாக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு அண்மையில் அளித்த பேட்டி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அரசியலில் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியது. இதனால் வேறு வழியின்றி அமைச்சர் ஆ.ராசா பதவி விலகியுள்ளார்.

இந்த நிலையில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அளித்த பேட்டியும், அதனைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து அமைச்சர் ஆ.ராசா பதவி விலகியுள்ள சம்பவத்தையும் பல்வேறு பத்திரிகைகளும் பாராட்டியுள்ளன.

குறிப்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் புரட்சித்தலைவி அம்மா அவர்களை பாராட்டி எழுதியுள்ள கட்டுரையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் முதன் முதலாக வெளியானது முதல் இன்றுவரை இந்த பிரச்சினையை முன்னெடுத்துச் செல்வதில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அக்கறை காட்டியதாகத் தெரிவித்துள்ளது.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அளித்த பேட்டியை விளக்கமாக எடுத்துக்கூறியுள்ள அந்த நாளிதழ், காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்தது ராஜதந்திர நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த அறிவிப்பில், தி.மு.க.வின் நிர்ப்பந்தத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை பாதுகாக்கும் நடவடிக்கை மட்டுமல்லாது மீண்டும் ஒரு இடைத்தேர்தலை நாடு சந்திக்கக் கூடாது என்ற நல்லெண்ணமும் வெளிப்படுவதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் அந்த பேட்டி இந்திய அரசியலில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதாகவும் அந்த பத்திரிகை வர்ணித்துள்ளது.

பேட்டி எடுத்தவர் கேட்ட கேள்விகளுக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சளைக்காமல் பதில் அளித்ததாகவும், எந்தவொரு விஷயத்தையும் விட்டுவைக்காமல் தெள்ளத் தெளிவாக எடுத்துக்கூறியதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த பேட்டியின் மூலம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாநிலத்தில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமின்றி காங்கிரஸ் அரசு பலவீனமாக இருப்பது - பாகிஸ்தான், சீன அச்சுறுத்தல் - தேசத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தெளிவான கருத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முன்வைத்ததாகவும் அந்த பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தெரிவித்த அனைத்து கருத்துகளும் நியாயமானவையே என்றும், அவை தேசத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பிரச்சினைகள் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான உறவு உள்ளிட்ட பிரச்சினைகளிலும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வெளிப்படையாகவும், தெளிவாகவும் பதிலளித்ததாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

எந்தவொரு பிரச்சினை என்றாலும் அதனை வலிமையுடன் மக்களிடம் எடுத்துச் செல்லும் திறன்படைதத அரசியல் தலைவர் புரட்சித்தலைவி அம்மாஅவர்கள் என்றும், அவரது இந்த தொலைக்காட்சி பேட்டி வெறும் பேட்டியாக மட்டுமல்லாமல் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும், நாட்டிற்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தெரிவிக்கும் உறுதியான செய்தி என்றே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

ராசா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிரான இடையறாத போராட்டத்தில் மக்கள் சக்தியையும், ஒருங்கிணைக்கும் திறன் கொண்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்றும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பேட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிகழ்வுகளால், இதுவரை காங்கிரசை நிர்ப்பந்தித்து வந்த தி.மு.க. இனிமேல் அதே பாணியில் செயல்பட முடியாமல் முடக்கப்பட்டுள்ளதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை தெரிவித்துள்ளது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites