July 07, 2010

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை கண்டிக்கவில்லை: ஜெயலலிதா விளக்கம்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அழிக்கப்பட்டதை கண்டிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள்  தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கை பிரச்னையில், ‘போர் நடக்கும்போது பொது மக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது’ என்று நான் தெரிவித்தது உண்மைதான். நடைமுறையில் உலகம் சந்தித்த ஒவ்வொரு போரிலும் நடைபெற்றது இதுதான். ஆனால், வேண்டுமென்றே போரின்போது பொதுமக்கள் கொல்லப்படுவதையும், போர் முடிந்துவிட்டது என்று அறிவித்த பின்னர், தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்ததையும் ஒப்பிட்டு கருணாநிதி பேசுகிறார். நான் குறிப்பிட்டது தவிர்க்க முடியாததைத்தான்.

கடந்த 1980ல் இருந்து எம்.ஜி.ஆரும், நானும் இலங்கை தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வந்தோம். ஆனால், தமிழ் மிதவாதிகளையும், போட்டி அமைப்பாளர்களையும், முன்னாள் பிரதமரையும் கொலை செய்ததற்கு பிறகு, விடுதலை போராட்ட அமைப்பு, தீவிரவாத அமைப்பாக மாறி விட்டது என்பது வெளிப்படையானது. அந்த தருணத்தில்தான் விடுதலைப் புலிகள் அமைப்பை நான் துணிச்சலுடன் எதிர்த்தேன்.

இன்றைக்குகூட போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அழிக்கப்பட்டதை நான் கண்டிக்கவில்லை. ஆனால் வெள்ளைக்கொடி அசைத்து, ராணுவத்தினர் முன்பு சரணடைந்த விடுதலைப் புலிகளை வேண்டுமென்றே கொன்றதை கண்டிக்கிறேன். போர் முடிந்துவிட்டது என்ற வார்த்தையை நம்பி, பதுங்கு குழியில் இருந்து வெளியில் வந்த ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா  அவகள் கூறியுள்ளார். 
 
 
.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites