July 08, 2010

கோடநாட்டிலிருந்து சென்னை திரும்பினார்கள் அம்மா அவர்கள்

கோத்தகிரி கோடநாட்டில் தங்கியிருந்த அம்மா, தோழி சசிகலா அவர்களுடன், நேற்று சென்னை திரும்பினார். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அவர்கள், தோழி சசிகலாவுடன், கடந்த 18ம் தேதி கோத்தகிரி கோநாடு எஸ்டேட்டுக்கு வந்து, கட்சிப் பணிகளை கவனித்து வந்தார். நேற்று காலை 10.00 மணியளவில் எஸ்டேட் பங்களாவிலிருந்து புறப்பட்ட அம்மா ., வழக்கத்துக்கு மாறாக, எஸ்டேட் சாலை சந்திப்புக்கு வந்து அ.தி.மு.க.,வினர் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாவட்ட செயலர் செல்வராஜ், முன்னாள் அமைச்சர் மில்லர், அவைத் தலைவர் தேனாடு லட்சுமணன், குன்னூர் தொகுதி செயலர் மாதன், ஊட்டி நகர செயலர் தேவராஜ், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலர் வினோத், ஜெ., மாவட்ட முன்னாள் பேரவை செயலர் மணி, குன்னூர் ஒன்றிய செயலர் கலைச்செல்வன், ஊட்டி நகராட்சி கவுன்சிலர் இம்தியாஸ், ஊட்டி சட்டசபை தொகுதி செயலர் பாபு உட்பட நிர்வாகிகள் வழியனுப்பினர்.
ஹெலிகாப்டரில் சென்றார்: நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், இவரை அழைத்து செல்ல வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இரு முறை சுற்றி வந்து தரையிறக்கப்பட்டது. ஜெ., ஹெலிகாப்டரில் செல்லாமல் காரில் செல்லக்கூடும் என, அ.தி.மு.க., நிர்வாகிகள் சாலையில் நீண்ட நேரம் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் வானம் தெளிவானதால், அம்மா., தோழி சசிகலா அவர்கள், ஹெலிகாப்டரில் கோவைக்கு சென்று, அங்கிருந்து சென்னை கிளம்பினார்.

.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites