This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

February 24, 2011

இந்திய தேசத்தை மீட்க வந்த பேரொளி புரட்சித்தலைவி அம்மாவுக்கு இன்று 63வது பிறந்த நாள்

சென்னை, பிப். 24
   இந்திய தேசத்தை மீட்க வந்த பேரொளி, புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு இன்று 63வது பிறந்த நாள். இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிரும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவை கழகத்தினர் ஏழை, எளிய மக்கள் பயனுற நல உதவிகள், அன்னதானம், ரத்த தானம் வழங்கி எழுச்சியோடு கொண்டாடுகிறார்கள்.

கழக பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு  62 வயது முடிந்து இன்று 63வது வயது பிறக்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாட கழகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழக உடன்பிறப்புகளுக்கு ஏற்கெனவே வெளியிட்டிருந்த அன்பு வேண்டுகோளில், ?கருணாநிதியின் தன்னலம் காரணமாக, அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது என்றும்,
விண்ணை முட்டும் விலைவாசி, கடுமையான மின்வெட்டு, பெட்ரோல் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, குடிநீர்ப் பற்றாக்குறை, மருத்துவ வசதியின்மை, சாலை வசதியின்மை என பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாக்கப் பட்டு இருக்கிறார்கள்.
இது தவிர, மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, பதுக்கல், கொலை, கொள்ளை என அனைத்து சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது.
அண்டை மாநிலங்களுடனான அனைத்து நதிநீர்ப் பிரச்சினைகளிலும் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோய்க் கொண்டு இருக்கின்றன. இலங்கை கடற்படையினரின் ஈவு இரக்கமற்ற கொடூரத் தாக்குதல்கள் காரணமாக மீன்பிடித் தொழிலையே விட்டுவிடும் நிலைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சட்டம்ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம், உலக அரங்கில் இந்திய நாட்டிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார் கருணாநிதி. இந்த ஊழல் மூலம் இந்திய நாட்டின் பொருளாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் கருணாநிதி குடும்பத்தினர் ஆபத்தை விளைவித்து இருக்கின்றனர் என்றும்,
எனவே, எனது பிறந்த நாளை கொண்டாடுவதை விட ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை காப்பாற்றும் பணிகளில் ஈடுபடுவது தான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றும்,
பொதுவாக எனது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புவதில்லை. இருப்பினும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள், எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று கருதினால், ஏழை, எளிய மக்களுக்கு துணிமணிகள் வழங்குதல், மருத்துவ சேவையாற்றுதல், அன்னதானம், ரத்ததானம், போன்ற நற்காரியங்களில் கழக உடன்பிறப்புகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
குடும்ப ஆட்சி அழிந்து நல்லாட்சி அமையும் நாளே தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் நாள் என்பதால், அனைத்து மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்களையும் அந்த வெற்றித் திருநாளன்று வைத்துக் கொள்ளலாம் என்று கழக உடன்பிறப்புகளை அன்போடு கேட்டுக் கொண்டார்கள்".
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அன்புக்கட்டளையை ஏற்று இந்திய நாட்டின்  பேரொளியாம், தமிழகத்தை வழிநடத்தப்போகும் ஆற்றல் அரசியாம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 63வது பிறந்த நாளை ஏழை, எளிய, நலிந்த ஆதரவற்றோர் பயன்பெறும் வகையில் கொண்டாட கழக உடன்பிறப்புகள் சிறப்பான ஏற்பாடுகளை நாடெங்கிலும் செய்துள்ளனர்.
கழகம் மட்டுமல்லாமல் கழகத்தின் சார்பு அமைப்புகளான எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, மாணவரணி, வழக்கறிஞர் பிரிவு, அண்ணா தொழிற்சங்க பேரவை, மகளிரணி, மருத்துவ அணி, இலக்கிய அணி, மீனவர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி, விவசாய பிரிவு, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை என ஒவ்வொரு அமைப்பும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என எல்லோருமே ரத்ததானம், இலவச வேஷ்டி, சேலை, தொழில் கருவிகள் வழங்குதல் முதலான நல உதவிகள் வழங்கவும் மாணவரணி சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் நோயாளி களுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் ஆதரவற்ற முதியோர்களுக்கு நல உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆதரவற்ற பெண் களுக்கு தையல் இயந்தி ரங்கள், ஊனமுற்றோ ருக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கவும், திருக் கோயில்கள், தேவாலயங் கள், பள்ளிவாயில்கள், தர்காக்களில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நோயின்றி நீடூழி வாழ சிறப்பு பூஜைகள் நடத்த கழக உடன்பிறப்புகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறந்த நாளான இன்று (24ந் தேதி) பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், வெள்ளிக் கொலுசுகள் வழங்கவும் கழக உடன் பிறப்புகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
கருணாநிதியின் கொடுங்கோல் குடும்ப ஆட்சியின் அவலங்களை நாட்டுமக்களுக்கு எடுத்துக்கூறி, அந்த கொடுமையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று (24ந் தேதி) முதல் 28ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட உள்ளன.
பிரிவு, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை என ஒவ்வொரு அமைப்பும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என எல்லோருமே ரத்ததானம், இலவச வேஷ்டி, சேலை, தொழில் கருவிகள் வழங்குதல் முதலான நல உதவிகள் வழங்கவும் மாணவரணி சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் நோயாளி களுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் ஆதரவற்ற முதியோர்களுக்கு நல உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆதரவற்ற பெண் களுக்கு தையல் இயந்தி ரங்கள், ஊனமுற்றோ ருக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கவும், திருக் கோயில்கள், தேவாலயங் கள், பள்ளிவாயில்கள், தர்காக்களில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நோயின்றி நீடூழி வாழ சிறப்பு பூஜைகள் நடத்த கழக உடன்பிறப்புகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறந்த நாளான இன்று (24ந் தேதி) பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், வெள்ளிக் கொலுசுகள் வழங்கவும் கழக உடன் பிறப்புகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
கருணாநிதியின் கொடுங்கோல் குடும்ப ஆட்சியின் அவலங்களை நாட்டுமக்களுக்கு எடுத்துக்கூறி, அந்த கொடுமையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று (24ந் தேதி) முதல் 28ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட உள்ளன.

February 22, 2011

நம்பகமான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்தபிறகு சரத்ரெட்டியின் அழைப்பை ஏற்று கலைஞர் டி.வி. அலுவலகங்களில் மத்திய புலனாய்வுத் துறை சோதனை கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா குற்றச்சாட்டு


சென்னை, பிப். 21
ஆவணங்கள் எரிக்கப்பட்டு, பணம் தொடர்பான ரசீதுகள், செலவுச் சீட்டுகள் கிழித்தெறியப்பட்டு, ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு சரத்ரெட்டி விடுத்த அழைப்பை ஏற்று மத்தியப் புலனாய்வுத் துறை கலைஞர் டி.வி.யில் சோதனை நடத்தியுள்ளது என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிக்கை வருமாறு
கிரிமினல் புத்தியோடு செயல்படுவதில் வல்லவரான கருணாநிதியை எதிர் கொள்வதில் எந்த அளவுக்கு சாமர்த்தியமாக, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டு இருக்கும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் உணராதது துரதிர்ஷ்டவசமானது. தேடப்பட்டு வரும் தீவிரவாதியான தாவூத் இப்ராஹிமுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள டைனமிக்ஸ் பால்வா குழுமம், 80 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு மற்றும் மூன்றாவது மனைவியின் மகள் கனிமொழி ஆகியோரை உரிமைதாரர்களாக கொண்டுள்ள கலைஞர் டி.வி.க்கு 206 கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கிறது என்ற தகவலை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியதன் மூலம் மிகப் பெரிய தவறை மத்திய புலனாய்வுத் துறை செய்து இருக்கிறது. இது போன்ற சந்தேகம் வெளிப்படுத்தப் படுவதற்கு முன்பு கலைஞர் டி.வி. அலுவலகத்தை சோதனை செய்து அங்குள்ள அனைத்து ஆவணங் களையும் கைப்பற்றி இருக்க வேண்டும்.  குற்றவாளிகளுக்கு கடைபிடிக்கப்படும் பொதுவான நடைமுறையை பின்பற்றியதன் மூலம், தலைசிறந்த கிரிமினல் திறனாளருக்கு போதுமான கால அவகாசத்தை அளித்து, தப்பிப்பதற்கு மத்திய புலனாய்வுத் துறை வழிவகுத்துவிட்டது.
அறிவாலயத்தில் உயர்மட்டக் குழு கூட்டம்
கலைஞர் டி.வி.யின் கலைக்கூடங்கள் மற்றும் அலுவலகத்தை உள்ளடக்கிய தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இரவோடு இரவாக உயர்மட்டக் குழுக் கூட்டம் நடந்ததாகக் கூறப்படுகிறது.  இந்தக் கூட்டத்தில் கருணாநிதி மட்டுமல்லாமல், ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர். பாலு, கலைஞர் டி.வி.யின் தலைமை செயல் அலுவலர் சரத்குமார் ரெட்டி, கருணாநிதியின் உடன் பிறந்தார் மகன் அமிர்தம், தணிக்கையாளர் சிவசுப்ரமணியன், தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ். ராமன்,  மூத்த வழக்கறிஞர்கள்,  மாநில அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு ஆகியோர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இரவு 11 மணிக்கு துவங்கிய கூட்டம் மறுநாள் காலை 4 மணியளவில் முடிந்ததாம். இந்தக் கூட்டத்தின் போது அண்ணா அறிவாலயக் கட்டடத்திற்கு வெளியே எரிந்து கொண்டிருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டுவிட்டனவாம்.  13.2.2011 அன்று கலைஞர் டி.வி. தொடர்பான முக்கிய ஆவணங்கள் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டு, பெருங்குடியில் உள்ள திறந்தவெளி குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  15.2.2011 அன்று, கலைஞர் டி.வி. தொடர்பான ரசீதுகள், பணம் தொடர்பான ஆவணங்கள், ரொக்க செலவுச் சீட்டுகள், பணம் செலுத்தப்  பட்டதற்கான ரசீதுகள் சிறு சிறு துண்டுகளாக கிழிக்கப்பட்டு, சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.  நம்பகமான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்தபிறகு, குற்ற ஆவணங்கள் இருந்த இடத்தை முழுவதுமாக சுத்தப்படுத்திவிட்டு, ?206 கோடி ரூபாய் பணப் பரிமாற்றத்திற்கும், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை; பெறப்பட்ட பணம் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது? என்று கனகச்சிதமான ஓர் அறிக்கையை வெளியிட்டார் சரத்குமார். இது மட்டுமல்லாமல், மேலும் ஒருபடி மேலே சென்று, ?மத்திய புலனாய்வுத் துறைக்கோ அல்லது வருமான வரித் துறைக்கோ இதில் ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், கலைஞர் டி.வி. தொடர்பான கணக்குகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்வதில் எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை? என்றும் தெரிவித்தார்.
இந்த அழைப்பினை ஏற்றுதான், மத்திய புலனாய்வுத் துறை கலைஞர் டி.வி. அலுவலகங்களில் சோதனை நடத்தியது போல் தெரிகிறது. மத்திய புலனாய்வுத் துறை சிரமம் பார்க்காமல் சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளை தோண்டி ஆராய்ந்து பார்த்திருந்தால்,  ஸ்பெக்டரம் ஊழலுக்கும், கலைஞர் டி.வி.க்கும் உரிய பூதாகரமான தொடர்புகளை கண்டுபிடித்து வெளிப்படுத்தி இருக்க முடியும்.
இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

February 21, 2011

ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம்






நண்பர்களே!!!
 
தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார், இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்.
 
மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார் நம் முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.
 
1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.
 
நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்.
 
இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.
 
நியாயக் கணக்கு:
 
இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.
 
அப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 =1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.
 
இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா?
 
மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.
 
ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.
 
துரோகம்-1:
உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200, 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.
 
துரோகம்-2:
பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.
 
துரோகம்-3:
தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய
நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL <http://s.tel/> போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.
 
துரோகம்-4:
MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள். துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.
 
துரோகம்-6:
நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.
 
துரோகம்-7:
இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு. துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.
 
துரோகம்-9:
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.
 
துரோகம்-10:
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.
 
இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.
 
ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர்.
 
அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
 
இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.
 
உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை. எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e-mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.
 
நன்றி.

டைம்ஸ் நவ்’ டி.வி.க்கு புரட்சித்தலைவி அம்மா அளித்த பேட்டி இந்திய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது


சென்னை, நவ. 17-
கடந்த இரண்டரை ஆண்டுகளாக பரபரப்பை ஏற்படுத்திவரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சினையில் முக்கியத் திருப்பம் ஏற்பட, டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அளித்த பேட்டி காரணமாக அமைந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விஷயத்தில் தி.மு.க.வின் நிர்ப்பந்தத்தையும் மீறி, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இந்த பரபரப்பு பேட்டி காரணமாக இருந்தது என்றும், அந்த நாளிதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் உரிய நடைமுறையை பின்பற்றாமல் முந்துபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், விசித்திரமான முறையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மேற்கொண்ட நடவடிக்கையால் நாட்டிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

கடந்த இரண்டரை ஆண்டுகாலமாகவே இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் இந்த பிரச்சினை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வந்தாலும், இதன் உச்சக்கட்டமாக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு அண்மையில் அளித்த பேட்டி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அரசியலில் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியது. இதனால் வேறு வழியின்றி அமைச்சர் ஆ.ராசா பதவி விலகியுள்ளார்.

இந்த நிலையில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அளித்த பேட்டியும், அதனைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து அமைச்சர் ஆ.ராசா பதவி விலகியுள்ள சம்பவத்தையும் பல்வேறு பத்திரிகைகளும் பாராட்டியுள்ளன.

குறிப்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் புரட்சித்தலைவி அம்மா அவர்களை பாராட்டி எழுதியுள்ள கட்டுரையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் முதன் முதலாக வெளியானது முதல் இன்றுவரை இந்த பிரச்சினையை முன்னெடுத்துச் செல்வதில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அக்கறை காட்டியதாகத் தெரிவித்துள்ளது.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அளித்த பேட்டியை விளக்கமாக எடுத்துக்கூறியுள்ள அந்த நாளிதழ், காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்தது ராஜதந்திர நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த அறிவிப்பில், தி.மு.க.வின் நிர்ப்பந்தத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை பாதுகாக்கும் நடவடிக்கை மட்டுமல்லாது மீண்டும் ஒரு இடைத்தேர்தலை நாடு சந்திக்கக் கூடாது என்ற நல்லெண்ணமும் வெளிப்படுவதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் அந்த பேட்டி இந்திய அரசியலில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதாகவும் அந்த பத்திரிகை வர்ணித்துள்ளது.

பேட்டி எடுத்தவர் கேட்ட கேள்விகளுக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சளைக்காமல் பதில் அளித்ததாகவும், எந்தவொரு விஷயத்தையும் விட்டுவைக்காமல் தெள்ளத் தெளிவாக எடுத்துக்கூறியதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த பேட்டியின் மூலம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாநிலத்தில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமின்றி காங்கிரஸ் அரசு பலவீனமாக இருப்பது - பாகிஸ்தான், சீன அச்சுறுத்தல் - தேசத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தெளிவான கருத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முன்வைத்ததாகவும் அந்த பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தெரிவித்த அனைத்து கருத்துகளும் நியாயமானவையே என்றும், அவை தேசத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பிரச்சினைகள் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான உறவு உள்ளிட்ட பிரச்சினைகளிலும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வெளிப்படையாகவும், தெளிவாகவும் பதிலளித்ததாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

எந்தவொரு பிரச்சினை என்றாலும் அதனை வலிமையுடன் மக்களிடம் எடுத்துச் செல்லும் திறன்படைதத அரசியல் தலைவர் புரட்சித்தலைவி அம்மாஅவர்கள் என்றும், அவரது இந்த தொலைக்காட்சி பேட்டி வெறும் பேட்டியாக மட்டுமல்லாமல் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும், நாட்டிற்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தெரிவிக்கும் உறுதியான செய்தி என்றே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

ராசா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிரான இடையறாத போராட்டத்தில் மக்கள் சக்தியையும், ஒருங்கிணைக்கும் திறன் கொண்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்றும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பேட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிகழ்வுகளால், இதுவரை காங்கிரசை நிர்ப்பந்தித்து வந்த தி.மு.க. இனிமேல் அதே பாணியில் செயல்பட முடியாமல் முடக்கப்பட்டுள்ளதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை தெரிவித்துள்ளது.

February 20, 2011

மேட்டுப்பாளையத்தில் நிலவும் அவல நிலைக்குக் காரணமான, நூல் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்க

சென்னை, பிப். 20
மேட்டுப்பாளையம் நகராட்சியில் நிலவும் அவல நிலைக்குக் காரணமான, நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தாத மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து, கோவை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், இன்று (20.2.2011 ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில், மேட்டுப்பாளையம் நகர பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிவிப்பு வருமாறு:
தலைமைக் கழக அறிவிப்பு அறிவிப்பு எண். 113/2011
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் முக்கிய அறிவிப்பு மேட்டுப்பாளையம் நகராட்சியில் நிலவும் அவல நிலைக்குக் காரணமான, நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தாத மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து, கோவை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 20.2.2011  ஞாயிற்றுக்கிழமை மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராத அலங்கோல ஆட்சியாக மைனாரிட்டி தி.மு.க. அரசு விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
மேட்டுப்பாளையம் நகராட்சியை எடுத்துக் கொண்டால், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர்.
எனது ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தினை மைனாரிட்டி தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளதன் காரணமாக கழிவு நீர் அனைத்தும் பவானி ஆற்றில் கலந்து நதிநீர் மாசுபட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் நகராட்சியே ஆக்கிரமிப்பு செய்துள்ளதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், மின் மயானப் பணிகளை நகராட்சி நிர்வாகம் தன்வசம் எடுத்துக் கொண்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் அந்தப் பணிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்றும், நகரின் மையப் பகுதியில் சிதிலமடைந்துள்ள அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயிலை புதுப்பிக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், நகரின் பல்வேறு இடங்களில் பொதுக்
கழிப்பிடம் கட்டும் பணி முடங்கிக் கிடப்பதாகவும், நகராட்சிக்கு உட்பட்ட 11 வார்டுகளில் துப்புறவுப் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம் முறையாக செயல்படாததன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மைனாரிட்டி தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாகவும், தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசின் ஏற்றுமதி கொள்கை காரணமாகவும், பருத்தி மற்றும் பட்டு நூலின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவதால், கைத்தறி நெசவுத் தொழிலை நம்பியுள்ள சிறுமுகை, சாமிசெட்டிப்பாளையம் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், காட்டு யானைகளால் பயிர்ச் சேதம் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் அரசாக மைனாரிட்டி தி.மு.க. அரசு விளங்குகிறது. எனவே, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் நிலவும் அவல நிலைக்குக் காரணமான, நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தாத மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கோவை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், 20.2.2011 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணி அளவில், மேட்டுப்பாளையம் நகர பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் டாக்டர் பி.எச். பாண்டியன் அவர்கள் தலைமையிலும், கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. தா. மலரவன், எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. செ.ம.வேலுசாமி, எம்.எல்.ஏ., மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் திரு.ஓ.கே. சின்னராஜ், எம்.எல்.ஏ., மற்றும் அவினாசி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆர். பிரேமா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோவை மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த
நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டுஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.



பொதுச்செயலாளர்
அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம்.
நாள்: 19.2.2011

சென்னை14.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites