December 24, 2009

ஜெயலலிதா அறிக்கை இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான்

வந்தவாசி,திருச்செந்தூர் இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால்,தேர்தல் சுதந்திரமாகவும்,நியாயமாகவும் நடைபெற வேண்டும் மக்கள் எந்த வித மிரட்டலுக்கும் ஆட்படாமல் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.ஆனால்,தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது.பொதுவாக,தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன்,மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்'என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூறுவது மரபு.ஆனால் திமுக அரசு பொற்ப்பேற்ற பிறகு,எந்தத் தேர்தலிலும் மக்களின் தீர்ப்பு உண்மையாக பிரதிபலிக்கப்படவில்லை.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாக இருந்தது.ஆனால்,தேர்தல் முடிவோ மக்களின் விருப்பத்துக்கு எதிராக இருந்தது.திருச்செந்தூர்,வந்தவாசி இடைத்தேர்தல்களின் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான்.இருப்பினும் திமுகவை எதிர்கொள்ள யாருமே இல்லை என்ற நிலைமை வரக் கூடாது என்ற எண்ணத்தில்,ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து அதிமுக போட்டியிட்டது.மக்கள் மீது நம்பிக்கை வைத்து,அதிமுக போட்டியிட்டது.மக்கள் மீது நம்பிக்கை வைத்து அதிமுக தனது ஜனநாயகக் கடமையை ஆற்றும்.இந்த இடைத்தேர்தல் வெற்றி,திமுகவுக்கு உண்மையான தோல்வியும் அல்ல.இதைக்கன்டு அதிமுக தொண்டர்கள் வருத்தப்பட்டால்,தொடர்ந்து ஜனநாயக முறையில் மக்கள் பணியாற்ற வேண்டும்.எனது வேண்டுகோளை எற்று,அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும்,அல்லும்,பகலும் அயராது உழைத்த கட்சித் தொண்டர்களுக்கும்,பிரசாரம் செய்த தோழமை கட்சித் தலைவர்களுக்கும்.தொண்டர்களுக்கும்,ஆதரவு நல்கிய அனைத்து அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.

.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites