திரிசூலம் பஞ்சாயத்து தலைவர், பல்லாவரம் வார்டு தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க பெண் வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதைத் தொடர்ந்து, தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பளிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
திரிசூலம் பஞ்சாயத்து தலைவர் அண்மையில் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் திரிசூலத்தை சேர்ந்த சரஸ்வதி (33) என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ''திரிசூலம் பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நான் உட்பட 5 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். வருகிற 7ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறவிருக்கிறது.
ஏற்கனவே பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்ட நிலையில் திரிசூலம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. தற்போது எனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும், வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும் மிரட்டி எனக்கு மர்ம தொலைபேசி வந்து கொண்டிருக்கிறது.
எனவே தேர்தல் முடியும் வரை எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் காவல்துறை பாதுகாப்பளிக்க உத்தரவிட வேண்டும். மேலும் வாக்குப்பதிவு முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறியுள்ளார்.
அதேபோல பல்லாவரம் நகராட்சி 7வது வார்டுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் ஆர்.சாந்தி போட்டியிடுகிறார்.
இவரும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ''தேர்தலில் இருந்து வாபஸ் பெற வேண்டும் என்று கூறி தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், எனவே தேர்தல் முடியும் வரை தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் காவல்துறை பாதுகாப்பளிக்க உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ளார்
-
*சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்திப்
பேசியுள்ளார் கோத்தபயா ராஜபக்சே. அவரது பேச்சுக்கு இந்தியா, இலங்கை தூதரை
ந...
13 years ago
0 comments:
Post a Comment