October 05, 2009

தமிழக மக்கள் தட்டிகேட்க தவறிவிட்டார்கள்..............

இந்தியாவில் இதுவரை நடைபெறாத இமாலய ஊழல் தான் ஸ்பெக்ட்ரம்.ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?தொலைத்தொடர்புத் துறையில் உள்ள அலை வரிசையின் அளவுகளே ஸ்பெக்ட்ரம்.இந்த 2ஜி என்கிற இரண்டாவது தலைமுறை ஸ்பெக்ட்ரம் அலைவரிசையின் வழியாக,விவரங்கள்(Data),குரல்( voice )படங்கள்(pictures),ஆகியவற்றை மொபைல் மூலமாகவும் Internet மூலமாகவும் பரிமாற்றம் செய்யலாம்.தொலைக்காட்சிக்கும் பயன் அளிக்கக் கூடியது.இந்த அலைவரிசைகளை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான இமாலய ஊழல் நடைப்பெற்றது.
இந்தியாவில் உள்ள 22 பகுதிகளுக்கான இந்த அலைவரிசையை பெற வேண்டி,இதற்கென நிர்ணயிக்கப்பட்ட தேதியான 1.10.2007 வரை 575 விண்ணப்பங்கள் 46 நிறுவனங்களிடமிருந்து மத்திய தொலை தொடர்புத் துறையால் பெறப்பட்டன.
இந்த சூழ்நிலையில்,முதலில் வருபவருக்கு முதலில் என்ற முறையை பின்பற்றலாமா அல்லது ஏல முறையை பின்பற்றலாமா என சில வழிமுறைகளை கோடிட்டுக் காட்டி தொலைத் தொடர்புத் துறையின் உறுப்பினர்(நிதி)அவர்கள் ஒரு குறிப்பை அனுப்பியதாகவும்,இதை பார்த்த அமைச்சர் ராசா வெகுண்டெழுந்து இந்த அலுவலரையே மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில்,மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நான்கு மாற்று வழிகளை வகுத்து Attorney General மற்றும் Solicitor General ஆகியோரின் கருத்தை கேட்டு மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்திற்கு கோப்பை அனுப்பியுள்ளது.இந்த கோப்பில்,இந்தப் பிரச்சனையை மத்திய அமைச்சரவை அதிகாரக் குழுவுக்கு(Empowered Group of Ministers)அனுப்ப வேண்டும் என்றும்,அந்த சமயத்தில் Attorney General மற்றும் Solicitor general ஆகியோரின் கருத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் கருத்து தெரிவித்தனர்.
Empowered Group of Ministers குழுவிற்கு அனுப்பத் தேவையில்லை என்றும் ,முதலில் வருபவருக்கு முதலில் என்ற முறையை 25.09.2007 வரை பெற்ற விண்ணப்பங்களுக்கு மட்டும் செயல்படுத்தப் போவதாகவும் பாரத பிரதமருக்கு மத்திய அமைச்சர் ராசா கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதற்க்கு பாரதப் பிரதமர் அவர்கள் ,வெளிப்படையான ஏல முறையை அமல்படுத்துவது,2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மாற்றுவது உள்பட பல்வேறு வியங்களை பரிசீலிக்குமாறு அமைச்சர் ராசாவை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேற்படி பிரதமரின் கடிதத்திற்கு அன்றே பதில் அளித்த அமைச்சர் ராசா கட்டணம் குறித்து வாய் திறக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையில்'முதலில் வருபவருக்கு முதலில்'என்ற முறையை கடைபிடிக்க மத்திய அமைச்சர் ராசா தன்னிச்சையாக முடிவு எடுத்து பாரதப் பிரதமருக்கு கடிதம் முலம் தெரிவித்திருக்கிறார்.
இந்த முறைகேட்டில் மாபெரும் ஊழல் நடை பெற்றுள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆனையம் தெரிவித்திருக்கிறது.
தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பது தெளிவாகிறது.இதில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன....

*தொலைத் தொடர்புத் துறை உறுப்பினர்(நிதி)அவர்களின் கருத்துக்கள் ஏன் புறக்கணிக்கபட்டன?

*அவர் அந்த துறையிலிருந்து விடுவிக்கபட்டது ஏன்?

*Empowered Group of Ministers என்ற குழுவுக்கு அணுப்ப வேண்டும் என்ற மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தின் கோரிக்கை ஏன் புறக்கணிக்கப்பட்டது?

*Attorney General மற்றும் Solicitor General ஆகியோரின் எழுத்து மூலமான கருத்துக்களை பெறாமல் அவசர கோலத்தில் நடவடிக்கை எடுத்தது ஏன்?


*2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

*ஏல முறையை பின்பற்றுவது குறித்த பிரதமரின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதுக்கு காரணம் என்ன?

*2001-ஆம் ஆன்டு நிர்ணயிக்கபட்ட கட்டணத்தை 2008- ஆம் ஆண்டு தொடர வேண்டியதன் அவசியம் என்ன?

*விண்ணப்பங்கள் அணுப்ப கடைசி தேதி 01.10.2007 என்று அறிவித்து விட்டு,25.09.2007 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மட்டும் 'முதலில் வருபவருக்கு முதலில்' என்ற முறையில் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்ததன் நோக்கம் தான் என்ன?

*மத்திய நிதி அமைச்சகம்,டிராய் அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்தும் இந்த முறையை கடைபிடித்ததின் நோக்கம் என்ன?

*முதலில் வருபவருக்கு முதலில் தரப்படும் 'என்ற அறிவிப்பு வெளி வந்த பிறகு,டிராய்(Telephone Regulatory Authority of India)அமைப்பின் தலைவர்,தனக்கும் ,இந்த அறிவிப்புக்கும் தொடர்பு இல்லை என்ற அளவில் தொலைத்தொடர்புத் துறை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறதே?ஏன் இவ்வாறு எழுதினார்?

*ஒரு முக்கியமான கொள்கை முடிவை எடுக்கும்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற வேண்டாமா?

*குறைந்தபட்சம் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலை பெற வேண்டாமா?

*ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை இந்தத் துறையில் அனுபவமில்லாத ஸ்வான்,யுனிடெக் போன்ற நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலையான 1,600 கோடி ரூபாய்க்கு கொடுக்க காரணம் என்ன?

*ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஒரு சில மாதங்களில் ஸ்வான் நிறுவனம் தனது 45 விழுக்காடு பங்குகளை கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்க்கு எடிசலாட் என்ற நிறுவனத்திற்கும்,யுனிடெக் நிறுவனம் தனது 60 விழுக்காடு பங்குகளை 6,120 கோடி ரூபாய்க்கு டெலினார் என்ற நிறுவனத்திற்கும் ஏன் விற்றது? இதில் லாபம் அடைந்தவர்கள் யார்?

*ஸ்வான் டெலிகாம் நிறுவனம்,தனது 9 விழுக்காடு பங்குகளை Genex Exim Ventures Pprivate Limited என்ற சென்னையை சேர்ந்த நிறுவனத்திற்கு விற்பனை செய்ததன் நோக்கம் என்ன?

*Genex Exim Ventures private Limited நிறுவனத்தின் இயக்குனர்களும் ETA மற்றும் ETA Star Group நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

*சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சராக ராசா இருந்தபோது கட்டுமானத் துறை தொடர்புடைய ETAமற்றும் ETA star Group நிறுவனங்களின் பெங்களூர் திட்டங்களுக்கு உடன்க்குடன் சுற்றுச்சூழல் அனுமதியை கொடுத்ததாக கூறப்படுகிறதே?இது குறித்து அமைச்சர் ராசாவால் விளக்கம் அளிக்க முடியுமா?

*இந்த ETA Group தானே தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டதில் தகவல் தொழிழ்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க தழிழ்நாடு அரசுடன் உடன்பாடு செய்து கொண்டது!இந்த நிறுவனத்திக்குத் தானே 500 ஏக்கர் நிலம் தரப்பட்டது!

*Genex Exim Ventures Private Limited என்ற நிறுவனமே அமைச்சர் ராசாவால்,அவருக்கு வேண்டியவர்களை வைத்து ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறதே?

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites