October 06, 2009

உழைப்பும், விசுவாசமும் அ.தி.மு.க.வின் இரு கண்கள்: பாசறை மாநில செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் பேச்சு

மதுரை புறநகர் மாவட்ட அ.தி.முக. இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி சிறப்புறையாற்றினார்.
எம்.ஜி.ஆரின் வழித்தோன்றல் ஜெயலலிதாவின் சிந்தையில் தோன்றி தீமைகளை தீர்க்கவந்த படைதான் இளைஞர் இளம்பெண்கள் பாசறை தமிழ்நாட்டிற்கு தேவை மங்களரகமான ஆட்சி. அது ஜெயலலிதாவின் ஆட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மதுரை புறநகர் மாவட்டம் திருமங் கலத்தில் உங்களோடு பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்கிறேன்.
அனைருவக்கும் நல் வாழ்வை வழங்கக்கூடிய திறமையும் நல்ல மனமும் படைத்தவர் ஜெயலலிதா.
தமிழகம் இதுவரை கண்டிராத இளையோர் படையை இன்று பார்கிறது. நாளை நம் வெற்றி முழக்கத்தை கேட்கப் போகிறது. ஆட்சியால் தமிழகம் முதன்மையாக நிற்கப்போகிறது.
ஏழைகளின் கால்கள் சட்ட மன்றத்துக்குள் நுழைய முடியுமா? உங்கள் கிராமத்து இளைஞன் உள்ளாட்சியிலும் எம்.எல்.ஏ. ஆகவும், கிராமத்து பெண் எம்.பி. ஆக முடியும் என்ற நிலையை உருவாக்கி தருகிற மகத்தான தலைவி ஜெயலலிதா.
உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய உயர்வை நிச்சயம் தருவார். அ.தி.மு.க. வை பொருத்தமட்டில் விசுவாசமும் உழைப்பும் இரண்டு கண்கள்.
மக்களுக்கு புதையலாக கிடைத்த இயக்கம்தான் அ.தி.மு.க. இயக்கம்தான். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் மக்கள் வாழ வேண்டும் என்ற மாறாத சிந்தனை கொண்டவர் ஜெயலலிதா.
இவ்வாறு அவர் பேசினார்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites