பன்னாட்டு,உள்நாட்டு நிறுவனங்களை வரவேற்க்கும் வகையில் பாரம்பரிய மீனவர்களை நசுக்கும் வகையில் கடல் மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை வரைவு சட்டத்தை கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.இந்த சட்டத்தின் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.இந்த மசோதா ஒருபோதும் தாக்கல் செய்யப்படக்கூடாது என்பது அதிமுக வின் நிலைப்பாடு புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு இந்த சட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.சுனாமியால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு அரசு சார்பில் கல் வீடும்,பழுதடைந்த வீடுகளை செப்பனிடுவதற்கு மானியமாக ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அளிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்தது.இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை.சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்காத புதுச்சேரி அரசை கண்டித்தும் மீனவர் விரோத சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற கோரியும் புதுச்சேரி அதிமுக சார்பில் 9ம் தேதி காலை 9.30 மணிக்கு புதுச்சேரி பழைய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
MGR மன்ற செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகிக்கிறார்.எம்.எல்.ஏக்கள் அன்பழகன்,ஓம் சக்தி சேகர் ஓமலிங்கம் மற்றும் புத்துப்பட்டர் முன்னிலை வகிக்கின்றனர்.இவ்வாறு ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்..
0 comments:
Post a Comment