January 07, 2010

ஆளுநர் உரை அம்மா அறிக்கை.

ஆளுநர் உரை கடந்த நான்கான்டு உரைகளின் மறுபதிப்பாக அமைந்துள்ளதே தவிர தொலைநோக்கு திட்டங்கள் கொண்ட உரையாக அமையவில்லை.கருப்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ,2 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் ஆனால் லாரி வாடகை மற்றும் கட்டுமான ஊக்கத்தொகையுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.1500ஜ மீண்டும் ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பது கரும்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
காவிரி,பாலாறு,பொன்னையாறு பிரச்னைகளை தீர்ப்பது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.மீனவர்கள் நலனுக்கு எதிரான சட்டம் கண்டிப்பாக கொண்டு வரப்பட மாட்டாது என்ற உறுதிமொழி ஆளுநர் உரையில் இல்லாதது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை எற்படுத்தி இருக்கிறது.மருத்துவதுறைக்கு பல கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும்,ஆயிரக்கணக்கான பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.ஆனால் பல மருத்துவமனைகளில் மருந்துகளும்,உபகரணங்களும் இல்லாத சூழ்நிலையும் தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாத அவல நிலையும்தான் உள்ளது.மொத்ததில் ஆளுநர் உரை அலங்கோல உரையாக உள்ளது.

.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites