January 27, 2010

டெல்லி பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா பேட்டி

டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் 60வது ஆண்டு விழா 25.01.2010 அன்று நடந்தது.அந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் கலந்து கொண்டார் பின்னர் அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அன்று மாலை சென்னை திரும்பினார்.அவரை ஓ.பன்னீர்செல்வம்,ஜெயகுமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
உங்கள் டெல்லி பயணம் எப்படி அமைந்தது?
சிறப்பாகவும்,மகிழ்சி அளிப்பதாகவும் அமைந்தது.
டெல்லியில் சோனியாவை சந்தித்து நீங்கள் பேசப் போவதாக கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவியதே?
தேர்தல் ஆணையத்தின் வைர விழாவில் நானும்,சோனியாவும் பங்கேற்றோம்.அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்து கொண்டோம்.பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டோம்.
தேர்தல் ஆணைய வைர விழாவில் சோனியா பேசும்போது சிலர் பண பலத்தையும்,அதிகார பலத்தையும் பயன்படுத்தி,ஆட்சியை பிடித்து விடுகின்றனர்.அதைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியுள்ளது பற்றி?கேள்வியை நீங்கள் தெளிவாகக் கேட்டீர்கள் என்றால் பதில் அளிக்கலாம்.இவ்வாறு ஜெயலலிதா அவர்கள் கூறினார்கள்.

.

1 comments:

பகிர்வுக்கு நன்றி !

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites