January 02, 2010

ஒய்வு பெற்றவர்களுக்கு வேலை வழங்கும் ஆணையை அரசு வாபஸ் பெற வேண்டும்

கடந்த மூன்றரை ஆண்டுகளாக தொழில் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர்.மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர் அவர்களுக்கு பதில் ஒய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் நியமிக்க அரசு ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது.பொதுநலன் கருதி அரசு ஊழியர்களின் பணிகளை நீட்டிக்கவும்,மறு வேலை வாய்ப்பு அளிக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு அதன் படி அரசு விரும்பினால் எந்த அரசு ஊழியரின் பனிக் காலத்தையும் நீட்டிக்கலாம்.ஆனால் அனைத்து மட்டங்களிலும் காலியாக உள்ள இடங்களை ஒய்வு பெற்றவர்களை கொண்டு நியமிக்கலாம் என்று அரசாணை பிறப்பித்திருப்பது மரபு மீறிய செயல் தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தலில் முறைகேடுகளை அரங்கேற்ற அச்சாரமாக இந்த ஆணை இருக்கிறதோ என்ற எண்ணம் எழுந்துள்ளது இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை கேட்டு கொள்கிறேன்.இந்த அரசானையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களில் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் இளைஞர்களை நிரப்ப வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அம்மா ஜெயலலிதா கூறியுள்ளார்.

.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites