தென் மாவட்டங்களில் நாடார் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன், கட்சியை விட்டு நீக்கப் பட்ட முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு பதிலடி கொடுக் கும் வகையில், கவுண்டர் இனத் தைச் சேர்ந்த மாவட்டச் செயலர் கே.வி.ராமலிங்கம் ஆகியோரை ராஜ்யசபாவுக்கு போட்டியிடும் வேட்பாளர்களாக அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
தமிழகத்திலிருந்து ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் இந்த மாதம் முடிகிறது. புது எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்க மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. தி.மு.க., சார்பில் கே.பி.ராமலிங்கம், தங்கவேல், செல்வகணபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட் பாளரின் பெயர் இன் னும் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க., சார் பில் மனோஜ்பாண்டியன், கே.வி.ராமலிங்கம் போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். மனோஜ் பாண்டியன் தற்போது வக்கீல் பிரிவு மாநில செயலராக உள்ளார். இவரது தந்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன். தாயார் சிந்தியா பாண்டியன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர். 38 வயதாகும் மனோஜ் பாண்டியன், சட்டப் படிப்பை சென்னை சட்டக் கல்லூரியில் முடித்தார். சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.எல்., முடித்துள் ளார். 1993ம் ஆண்டு அ.தி.மு.க., வில் இணைந்தார். ஜெயலலிதா முன்னிலையில் கடந்த 1997ம் ஆண்டு மனோஜ் பாண்டியனின் திருமணம் நடந்தது. வக்கீல் பிரிவின் மாநில இணைச் செயலராகவும், 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தொகுதியின் எம்.எல். ஏ.,வாகவும் பணியாற்றினார்.
ஜெயலலிதா பரிந்துரையின் மூலம் கடந்த ஆண்டு வாஷிங் டன் நகரில் நடந்த, "இளந்தலைவர் வருகை' என்ற மாநாட்டில் மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டார். அம்பேத்கர் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப் பினராகவும், முன் னாள் ராணுவ வீரர் வாரிய உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது, ஐகோர்ட் டில் குற்றவியல், சிவில், அரசியல் சட்டம் தொடர் பான வழக்குகளில் ஆஜராகி வருகிறார். தென் மாவட்டத்திற்கும், நாடார் சமுதாயம் மற் றும் கிறிஸ்தவ மதத் திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவருக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்பட்டுள்ளது. லோக்சபா எம்.பி.,க்களில் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் இடம் பெறவில்லை என்பதாலும், நாடார் சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க.,வில் இணைந்ததாலும் அச்சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக் கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் தேவர் சமுதாய ஓட் டுக்கள் அ.தி.மு.க., விற்கு பெருவாரியாக கிடைக்கவில்லை. எனவே, பெரும் பான்மை சமுதாயமாக விளங்கும் நாடார் சமுதாய ஓட் டுக்களை கவரும் வகையில் மனோஜ் பாண்டியனுக்கு எம்.பி., பதவி வழங் கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகர் மாவட்டச் செயலர் கே.வி.ராமலிங்கத் திற்கு "ஜாக்பாட்'டாக ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைத் துள்ளது. முன்னாள் அமைச்சர் முத்துசாமி அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டதால் அவரது சொந்த மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவும், முத்துசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவரான ராமலிங்கத்திற்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கொங்கு மண்டலத்தில் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த திருப்பூர் சிவசாமி, பொள்ளாச்சி சுகுமார் ஆகியோர் லோக்சபா எம்.பி.,க் களாக உள்ளனர். தற்போது ராமலிங்கத்திற்கு பதவி கொடுக் கப்படுவதால் கவுண்டர் சமுதாயத்திற்கு மூன்று எம்.பி.,க்கள் கிடைத்துள்ளனர். ராமலிங்கத்தின் தந்தை வேலுச் சாமி மறைந்து விட்டார். தாயார் அம்மினி அம்மாள். மனைவி அம்மனி அம்மாள். இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 1984ம் ஆண்டு கட்சியில் இணைந்தார். 1994ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தாராபுரம் ஒன்றிய செயலராக பணியாற்றியுள்ளார். 2006ம் ஆண்டு முதல் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலராக பணியாற்றி வருகிறார்.
. நன்றி தினமலர்
0 comments:
Post a Comment