June 20, 2010

இலங்கையில் தமிழ் பெயரில் இருந்த ஊர்களுக்கு,சாலைகளுக்கு சிங்கள பெயர்

இலங்கையில் தமிழ் பெயரில் இருந்த ஊர்களுக்கு,சாலைகளுக்கு சிங்கள பெயர் ஜெயலலிதா அவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருவதாகவும்,தமிழர்களின் பண்பாடி,சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதாகவும் தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள்,தமிழ் பெயரில் இருந்த சாலைகளுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதாகவும் இதன் முலம் அங்குள்ள நிலங்கள் எல்லாம் சிங்கள நிலங்கள் என்று திரித்துக் கூற  முயற்சி நடப்பதாகவும் போரின் போது சிதந்து போன  தமிழர்களின் கோவில்கள்,தேவாலயங்கள்,மசூதிகள் ஆகியவற்றை கட்டி தர நடவடிக்கை எடுக்காமல் புத்த விகாரைகள்  புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல் வருகின்றன மொத்தத்தில் தமிழ்ப் பகுதிகள் சிங்கள மயமாக்கப்படுகின்றன.இப்படிப்பட்ட  சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவது என்பது எப்படி சாத்தியமாகும் இந்த நிலையில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் 50,000 வீடுகள் கட்டி தர இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.எற்கனவே 500 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டதே?அந்த நிதி இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்காக எந்த அளவிற்க்கு உபயோகப்படுத்தப்பட்டது என கேட்டறிந்ததா?தமிழர்களின் மறுவாழ்வு குறித்துக் கேட்டபோது அந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார் இலங்கை அதிபர்.தற்ப்போது பாரத பிரதமரிடம் இந்த ஆண்டு இறுதிக்குள் 47,000 தமிழர்கள் குடியமர்த்தப் படுவதாக உறுதி அளித்து இருக்குறார்.இந்த உறுதிமொழியெல்லாம் வாயளவில் தான் இருக்கிறதே தவிர செயல்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.இலங்கைத் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகளான இலங்கை வட பகுதி முகாம்ளில் இன்னும் 1 லட்சம் பேர் ஆதரவற்றவர்களாய் முகாம்களில் உள்ளனர்.அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.மறு குடியேற்றப்பட்ட  மக்களுக்கு நிவாரணம் செய்து தர வேண்டும்.அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கபட வேண்டும்.அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் சரிசெய்யப்பட வேண்டும்.மக்களுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்.கல்வி நிலையங்கள் அமைக்கப் பட வேண்டும்.புதிய பள்ளிகள் கட்டப்பட வேண்டும்.பழைய பள்ளிகள்  புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.போரினால் கணவனை இழந்த விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.போரின் போது கற்ப்பழிக்கப் பட்ட சிறுமிகளுக்கும்,பெண்களுக்கும் கவுன்சிலிங் தரபட வேண்டும்.கோவில்கள்,தேவாலயங்கள்,மசூதிகள் புத்த மடாலயங்களாக ஆக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.தண்ணார்வத் தொண்டு நிறுவனங்கல் அங்கு பணியாற்ற அனுமதிக்கபட வேண்டும்.பத்திரிகையாளர்கள் தமிழர்களை சந்திக்க அனுமதிக்க பட வேண்டும் இவ்வாறு அம்மா அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளார்.

.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites