
டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் 60வது ஆண்டு விழா 25.01.2010 அன்று நடந்தது.அந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் கலந்து கொண்டார் பின்னர் அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அன்று மாலை சென்னை திரும்பினார்.அவரை ஓ.பன்னீர்செல்வம்,ஜெயகுமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:உங்கள் டெல்லி பயணம் எப்படி அமைந்தது?சிறப்பாகவும்,மகிழ்சி அளிப்பதாகவும் அமைந்தது.டெல்லியில் சோனியாவை சந்தித்து நீங்கள் பேசப் போவதாக கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவியதே?தேர்தல் ஆணையத்தின் வைர விழாவில் நானும்,சோனியாவும் பங்கேற்றோம்.அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம்...