சென்னை : "மக்களின் தேவைக்கேற்ப காஸ் சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் வினியோகம் செய்ய வலியுறுத்தியும், ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் பெற்றுவந்த மானியத்தை திரும்ப வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த மானியத்தை தி.மு.க., அரசு சமீபத்தில் ரத்து செய்துவிட்டது. மக்களின் தேவைக்கேற்ப காஸ் சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் அனைவருக்கும் பாரபட்சமின்றி வினியோகம் செய்ய வலியுறுத்தியும், ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் பெற்றுவந்த மானியத்தை திரும்ப வழங்க வலியுறுத்தியும், வடசென்னை அ.தி.மு.க., சார்பில் நாளை காலை 9.30 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாவட்ட செயலாளர் சேகர்பாபு முன்னிலையில், மைத்ரேயன் எம்.பி., தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கும். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment