அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அவர்கள் 23.11.2009 அன்று வெளியிட்ட அறிக்கை:தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கடல்மீன் தொழில் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்ட மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.படகுகளுக்கு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்,மீன் பிடிக்க உரிமம் பெற வேண்டும்,12கடல் மைல் தாண்டி மீன் பிடித்தால் 9 லட்சம் ரூபாய் அபராதம் 3 மாத சிறை என்று மீனவர்களை துன்புறுத்தக் கூடிய எல்லா அம்சங்களும் மசோதாவில் இடம் பெற்றுள்லன்.அதே சமயம்,வெளிநாட்டு மீன்பிடி படகுகள்,எந்த தடையுமின்றி இந்திய எல்லைக்குள் வர இந்த சட்டம் வழி வகுக்கிறது என்றும்,வெளிநாட்டினர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மீன் தேவையை கருத்தில் கொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்க இச் சட்டம் கொணடு வரப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.உடனடியாக இந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற கருநாநிதி வலியுறுத்த வேண்டும்.கரும்புக்கான ஆதார விலை குறித்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்த போது அதை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்தது அதிமுக தான் நாடாளு மன்றத்திலும் அதிமுக உறுப்பினர்கள் எதிர்த்தனர்.அதனால் மத்திய அரசு அதில் சில திருத்தங்களை கொண்டுவரவுள்ளது.அதேபோல் கடல் மீன் தொழில் மசோதாவையும் அதிமுக கடுமையாக எதிர்க்கும்.அதை அறிமுக நிலையிலேயே திரும்ப பெற அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடிப்பார்கள் இவ்வாறு ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.
.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ளார்
-
*சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்திப்
பேசியுள்ளார் கோத்தபயா ராஜபக்சே. அவரது பேச்சுக்கு இந்தியா, இலங்கை தூதரை
ந...
13 years ago
0 comments:
Post a Comment