
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு, அறிக்கையின் சில பகுதிகள் எப்படி பத்திரிகைகளுக்கு கசிந்தன. இந்த பிரச்னையை, எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் அவசர, அவசரமாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கை கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை ராஜினாமா செய்ய கோருவது நியாயம். ஆனால், ‘அறிக்கை கசிந்தது துரதிருஷ்டவசமானது. உள்துறை அமைச்சகத்துக்கு வெளியில்தான் அது ஏற்பட்டிருக்கிறது’ என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்செக்ஸ் குறியீடு அபரிதமாக உயர்ந்தபோது தன் பொருளாதார கொள்கைதான் காரணம் என்று நிதி அமைச்சராக இருந்தபோது சொன்னார். வீழ்ச்சி ஏற்பட்டபோது சந்தை மீது பழி போட்டார். இதே முறையைதான், இப்போதும் சிதம்பரம் கடைபிடித்திருக்கிறார். கரும்பு விலை அவசர சட்டம், மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை சட்டம், முல்லை பெரியாறு பிரச்னை என முக்கியமான மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் லிபரான் அறிக்கை பின்னுக்கு தள்ளிவிட்டது. மத்திய அரசு மட்டும்தான் இந்த அறிக்கை கசிவின் மூலம் பயன் அடைந்துள்ளது. இது சூழ்ச்சியுடன் திட்டமிட்டு வெளியிடப்பட்ட கசிவு.
அறிக்கையின் ஒரே ஒரு நகல் மத்திய உள்துறை அமைச்சரிடம் மட்டும்தான் இருந்தது. எனவே, அறிக்கை கசிவுக்கு சிதம்பரம்தான் முழு பொறுப்பு என்பது வெளிப்படை. அவர் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
நன்றி தினகரன்
0 comments:
Post a Comment