November 23, 2009

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்


திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வருகிற டிசம்பர் 19ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் அணையம் அறிவித்து.

இதையடுத்து அ.தி.மு.க.இந்த இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். இந்நிலையில் இன்று காலை அ.தி.மு.க.சார்பில் திருச்செந்தூர்,வந்தவாசிதொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிவிப்பில் திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் அம்மன் நாராயணனும், வந்தவாசி தொகுதியில் முனுசாமியும் போட்டியிடுவார்கள் என்று அறிவித்துள்ளார்


.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites