November 11, 2009

அரசுக்கு ஜெயலலிதா வலியுறுத்தல் வெள்ள நிவாரண நிதியை 3 மடங்கு உயர்த்துங்கள்.

அரசுக்கு ஜெயலலிதா வலியுறுத்தல் வெள்ள நிவாரண நிதியை 3 மடங்கு உயர்த்துங்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை;மழையால் ஆண்டிப்பட்டி தொகுதியில் வண்டியூர்,ராயர்கோட்டை,தண்டியகுளம் உட்பட பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகள் சரியாக தூர்வாரப்படாததால்,கூழையாறு,வளவனாறு ஆகியவற்றில் உடைப்பு ஏற்பட்டு 2.5 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.கடலூர்,விழுப்புரம்,ராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்கலில்,கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாமல் வருமானம் இன்றி தவிக்கிறார்கள்.சென்னையில் மழைக்காலங்களில் பக்கிகாம் கால்வாயிலிருந்து வெளியேறும் நீர் குடியிருப்புகளுக்குச் செல்லாமல் ஒக்கியம் மடுவு வழியாக நேரடியாக கடலுக்கு எடுத்துச் செல்லும் வகையில் 3 கால்வாய்களை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு 2005ம் ஆண்டில் பொதுப்பணித் துறைக்கு நான் உத்தரவிட்டேன்.பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டது திமுக அரசு என்னுடைய உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்குமேயானால் மேற்படி பகுதிகள் இப்பொது நீரில் மூழ்கியிருக்காது.2005ம் ஆண்டில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது அனைவருக்கும் தலா 2000 ரூபாய் உட்பட வெள்ள நிவாரணத்தொகுப்பு வழங்கப்பட்டது.இப்பொது விலைவாசி 3 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.எனவே பயிர் இழப்பீட்டுத் தொகையும்,வெள்ளநிவாரணத் தொகையையும் 3 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும்.மழை வெள்ளத்தால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கவும்,சாலைகளை செப்பனிடவும்,சீராக மின்சாரம் வழங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1 comments:

Please vote for MGR in whopopular website. And spread the word. We are doing this job for the past one month.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites