November 18, 2009

அதிமுக உள்கட்சி தேர்தல் அம்மா ஜெயலலிதா இன்று அவசர ஆலோசனை.


அதிமுக உள்கட்சி தேர்தல் அம்மா ஜெயலலிதா இன்று அவசர ஆலோசனை.அதிமுக சட்ட விதிகளின் படி உள் கட்சி தேர்தல்,ஜந்து ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும்.ஏற்கனவே 2003 ம் ஆண்டு அதிமுக உள்கட்சி தேர்தல் நடந்தது.இதைத் தொடர்ந்து உள்கட்சி தேர்தல் அறிவிப்பை ஜெயலலிதா அவர்கள் கடந்த 12ம் தேதி வெளியிட்டார்.முதல்கட்டமாக,நவம்பர் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரையும்,2ம் கட்டமாக 27 முதல் 30ம் தேதி வரையும் கிளை நிர்வாகிகள்,வார்டு,வட்டச்செயலாளர்கள் பொருப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது.3 வது கட்டமாக டிசம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஒன்றிய,நகர,பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகள் தேர்தலும்,4வது கட்டமாக டிசம்பர் 7 முதல் 11ம் தேதி வரை மாவட்ட செயலாளர்கள்,பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலும் நடக்கிறது.தேர்தலை நடத்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களாக கட்சி மூத்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களிடம் தேர்தல் பணி குறித்து இன்று காலை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா அவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites