November 23, 2009

இடைத்தேர்தல் அதிமுக.வினரிடம் அம்மா ஜெயலலிதா நேர்காணல்.

திருச்செந்தூர்,வந்தவாசி சட்டபேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் அம்மா ஜெயலலிதா அவர்கள் நேற்று[22.11.09]நேர்காணல் நடத்தினார்.திருச்செந்தூர்,வந்தவாசி சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 19 ம் தேதி நடக்கிறது இந்த முறை இடைத்தேர்தலில் அதிமுக கண்டிப்பாக போட்டியிடும் என்று அம்மா ஜெயலலிதா கடந்த 20ம் தேதி அறிவித்தார்.இதையடுத்து 2 தொகுதியில் இருந்தும் தலா 3 பேரை தேர்ந்தெடுத்து உடனடியாக சென்னை வரும்மாறு நேற்று முன் தினம் அழைப்பு விடுக்கப்பட்டது.திருச்செந்தூர் தொகுதியை சேர்ந்த பள்ளதூர் முருகேசன்[முன்னாள் ஒன்றிய செயலாளர்]அம்மன் நாராயணன்[உடண்குடி ஒன்றிய செயலாளர்]தாமோதரன்[2004 ல் திருச்செந்தூர் நாடாளு மன்ற தேர்தலிலும் ,1996 ல் திருச்செந்தூர் சட்டப்பேரவை தேர்தலிலும் தோற்றவர்]வந்தவாசி தொகுதியில் முனுசாமி[நகர M.G.R மன்ற பொருளாளர்]குணசீலன்[அனங்காவூர் ஒன்றிய செயலாளர்] சக்கரபாணி[மாவட்ட இளைஞர் அணி செயலாளர்] ஆகியோர் வந்தனர்.இவர்களை தனி தனியாக அழைத்து ஜெயலலிதா அவர்கள் நேர்காணல் நடத்தினார் வந்தவாசி தொகுதி தனித் தொகுதி என்பதால் அந்த தொகுதியை சேர்ந்த 3 பேரிடம்,ஜாதி சான்றிதழ் கொண்டு வருமாறும் உத்தரவிட்டார்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites