November 30, 2009

அரசின் ரகசியங்களை யாரும் வெளியிடலாமா?ஜெயலலிதா அவர்கள் கேள்வி?

அம்மா அவர்கள் 29.11.2009 அன்று வெளியிட்ட அறிக்கை:
லிபரான் கமிஷன் அறிக்கை கசிந்ததற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினால் 'சிதம்பரம் மீது சீற்றம் ஏன்?என்று முதல்வர் கருணாநிதி என்னை கேட்டுள்ளார்.1992 ல் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு குழு கூட்டத்தில் பாபர் மசூதி அப்படியே இருக்க வேண்டும் இந்த நாட்டு மக்கள் நிம்மதியாக அமைதியுடன் வாழ வழி வகுக்க வேண்டும் என்று நான் தெள்ள தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.இதை வேண்டுமென்றெ மறைத்து அவர் அறிக்கை விட்டுள்ளார்.லிபரான் அறிக்கை கசிந்ததற்கு காரணம்,சிதம்பரம் என்பதால்தான் அவர் வெளியேற வேண்டும் அல்லது வெளியெற்றப்பட வேண்டும் என்று நான் தெரிவித்தேன்.ஆனால் ஒரு சம்பவத்திற்காக விசாரணை ஆணையம் நியமிக்கப்படுவதும்,அது அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்வதும் பொதுவான நடைமுறைதான் என்றும் அதை அரசு வெளியிடும் முன் எதிர்க்கட்சியினரால் வெளியிடப்படுவதும் உண்டு என்றும் அந்த வகையில் பால் விசாரனை ஆணையத்தின் அறிக்கையை முன் கூட்டியே தான் வெளியிட்டு விட்டதாகவும் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.அப்படி யென்றால் தனக்கு அநத அறிக்கை எப்படி கிடைத்தது என்ற ரகசியத்தை அரசிடம் தெரிவித்து அதற்க்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்போது அவர் வலியுறுத்தியிருக்க வேண்டும் இதற்கு மாறாக நீதிபதி பால் அறிக்கை எவ்வாறு வெளியானது அதற்கு யாரை பழி வாங்குவது என்பதில் நேரத்தை செலவிட வேண்டாம் என்று பேரவையில் பேசியதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார் அப்படி பார்த்தால் அரசு ரகசியங்களை யார் வேண்டுமானாலும் முன் கூட்டியே வெளியிடலாமா?

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites