
சட்டசபைத் தேர்தலுக்கு திமுகவை விட படு வேகமாக தயாராகத் தொடங்கியுள்ளது அதிமுக. அதிமுக கூட்டணியில் புதிய கட்சியாக முதல் ஆளாக புதிய தமிழகம் வந்து சேர்ந்துள்ளது.
நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அவருடன், புதிய தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருண், அமைப்புச் செயலாளர் வி.கே.அய்யர், மாணவர் அணிச் செயலாளர் பாஸ்கர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ராமராஜ், வி.சுப்பிரமணியம், ஐயப்பன் ஆகியோர் இருந்தனர்.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள...